For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காதில் ஒரு பூ அல்ல ஒரு கூடை பூ..லாஜிக் மொத்தமும் மிஸ்ஸிங்..அமலாபாலின் ‘கடாவர்’..சினிமான்னா இப்படியா?

  |

  சென்னை: நடிகை அமலாபாலின் கடாவர் படம் பற்றி ஆஹா ஓஹோன்னு விமர்சனம் வருகிறது, ஒரு கதையை லாஜிக்கே இல்லாமல் எடுத்து கிரைம் கதை என பாராட்டை குவித்துள்ளார் அமலாபால்.

  விமர்சனங்கள் பெரும்பாலும் லாஜிக் பற்றி பேசாமல் ரசிக மனப்பான்மையில் எழுதப்படுகிறது.

  ஆனால் படம் எடுப்பவர்கள் கொஞ்சமாவது லாஜிக் பற்றி யோசிக்க வேண்டாமா? தனக்கு தோன்றியதை படமாக எடுப்பதும் அதை கிரைம் தில்லர் என சொல்வதும் நகைச்சுவைக்குரிய விஷயம்.

  இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!இது நயன்தாரா இல்லைப்பா..ஏமாந்துடாதீங்க இது சின்னத்திரை நயன்தாரா? கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  ஆவலை தூண்டிய அமலாபால்

  ஆவலை தூண்டிய அமலாபால்

  சமீபத்தில் ஓடிடியில் வெளியான கடாவர் படத்தில் அமலா பால் பாரன்சிக் பெத்தலாஜிஸ்ட்டாக வருகிறார். அது ஒன்றும் பெரிய மேட்டர் அல்ல. பிரேத பரிசோதனை நிபுணர், தடயவியல் சம்பந்தமாகவும் போலீஸுக்கு ஆலோசனை வழங்குபவர். சுருக்கமாக சொன்னால் போலீஸ் சர்ஜன் என்பார்கள். திரைப்படம் வெளியாவதற்கு முன் ஒரு விழாவில் அமலாபால் பேசும்போது அறிமுக இயக்குனர் இந்த படத்திற்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளார், நாங்கள் பெரிய அளவில் ஹோம் வர்க் செய்து படத்தை எடுத்துள்ளோம், மார்ச்சுவரி குறித்து ஏகப்பட்ட தகவல்களை சேகரித்து படத்தை எடுத்துள்ளோம். இதுவரை பார்த்த கிரைம் சப்ஜக்டுகளிலேயே இது வித்யாசமான சப்ஜக்ட் என ஆவலை தூண்டினார்.

  பிணவறையில் உணவு உண்ணும் அமலாபால்

  பிணவறையில் உணவு உண்ணும் அமலாபால்

  இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு. நடிகை அமலாபால் தயாரிப்பாளராக வருவதை அனைவரும் வரவேற்றனர். ஆனால் ஒரு படம் எடுக்கும் பொழுது அவர் சொன்னப்படி ஹோம் வர்க் செய்து சம்பந்தப்பட்ட எக்ஸ்பர்ட்டுகளை கேட்டிருந்தால் படம் இந்த அளவுக்கு காதில் பூச்சுற்றும் அளவு வந்திருக்காது. படத்தில் அமலாபால் தான் கதாநாயகி. படத்தில் யதார்த்தத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக அடித்துள்ள கூத்துக்களை பார்த்தால் ஒரு கூடை பூவை ரசிகர்கள் காதில் வைக்கிறார்கள். மார்ச்சுவரியில் பிணப்பரிசோதனைகள் நடக்கும் இடத்திலேயே அமலாபால் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாராம். எந்த சர்ஜனும் அப்படி செய்ய மாட்டார்கள், மனித இயல்பை தாண்டிய விஷயம் அது.

  அது மார்ச்சுவரியா காய்கறி கடையா?

  அது மார்ச்சுவரியா காய்கறி கடையா?

  ஏசி, இன்ஸ் எல்லாம் மாஸ்க் போடாமல் காய்கறி மார்க்கெட்டில் கறிகாய் வாங்க நிற்பதுபோல் நிற்கிறார்கள். அது பிணவறை அய்யா, வாந்தி முட்டிக்கொண்டு கண்ணு முழி ரெண்டையும் வெளியே தள்ளுவதுபோல் குமட்டல் வரும். போனவர்களுக்கு தெரியும் அந்த கஷ்டம்.. அப்பப்ப ஞாபகம் வந்து ஏசி கைக்குட்டையை எடுத்து முகத்தில் வைத்துக்கொள்வதுபோல் காட்டுகிறார்கள். இதெல்லாம் ஒரு குறையா ப்ரோ என சினிமாவை சினிமாவாக பார்ப்பவர்கள் கேட்கிறார்கள் ஓக்கே ப்ரோ அளவற்ற சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்று விட்டு விடலாம்.

  போலீஸ் சர்ஜன் வேலை என்ன?

  போலீஸ் சர்ஜன் வேலை என்ன?

  அடுத்து வருவதுதான் காமெடி, போலீஸ் சர்ஜனின் பணி ஃபாரன்சிக் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் வழங்குவது, வெளியிடங்களில் புதைக்கப்பட்ட பல நாட்கள் ஆகி அழுகிய பிணங்களை சம்பவ இடத்திலேயே போஸ்ட்மார்டம் செய்வது, போஸ்ட்மார்ட்டத்தில் உள்ள தயடவியல் சங்கதிகளை கண்டறிவது (உதாரணமாக தூக்கில் தொங்கும் முன் கை, கால் முறியும் அளவுக்கு தாக்கப்பட்டுள்ளார், தலையில் தாக்கி கொலை செய்தபின்னர் தண்ணீரில் தூக்கி போட்டுள்ளனர், கொலைக்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் போன்ற நுணுக்கமான விஷயங்களை சொல்வார்) அதுதான் படத்தில் சொல்றாங்களே ப்ரோன்னு கேட்கலாம், சொல்கிறார்கள் அல்லவா அதோடு அவர் பணி முடிந்துவிடும்.

  போலீஸ் போல் விசாரணை நடத்தும் போலீஸ் சர்ஜன்

  போலீஸ் போல் விசாரணை நடத்தும் போலீஸ் சர்ஜன்

  ஆனால் படத்தில் என்ன நடக்குது. ஹோம் மினிஸ்டர் ( தமிழ் நாட்டில் முதல்வர்தான் ஹோம் மினிஸ்டர்) அழைத்து ஒரு கொலை குறித்து ஏசியிடம் விசாரிக்க சொல்கிறார் ( சினிமாக்காரர்கள் வார்த்தையில் ஏசிபி) அப்போது ஏடிஜிபி ரேங்கில் இருக்கும் அதிகாரி அந்த ஃபாரன்சிக் பெத்தாலஜிஸ்ட் அந்தம்மாவையும் கூட்டிட்டு போ என்கிறார். அமலா பாலும் இருக்கிற வேலையை விட்டுவிட்டு ஏசியுடன் ஜெயில், ஹாஸ்பிடல், கைதியுடன் விசாரணை நடக்கும் இடங்களுக்கு எல்லாம் செல்கிறார். விசாரணை நடத்துகிறார். உலக காமெடி இது. போலீஸ் சர்ஜன் போஸ்ட்மார்ட்டம் செய்து ரிப்போர்ட் கொடுப்பதோடு பணி முடிந்துவிடும். இதை அமலா பால், "கிரைம் சப்ஜக்ட் முற்றிலும் மாறுபட்ட கோணம்" என்று காதில் பூச்சுற்றினால் பொதுவானவர்கள் புரியாமல் ஏற்றுக்கொள்வார்கள், அந்தத்துறையில் உள்ளவர்கள் சிரிப்பார்கள்.

  குறைமாத குழந்தையை வீட்டில் வைத்து வளர்ப்பது வேடிக்கை

  குறைமாத குழந்தையை வீட்டில் வைத்து வளர்ப்பது வேடிக்கை

  அடுத்து ஒரு விபத்து நடந்தால் காயம்பட்டவரை உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்ப்பார்கள். அங்கு சிகிச்சை அளிக்கப்படும், படத்தில் செயின் பறிப்பில் சிக்கி ஓடும் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து அடிபடும் கர்ப்பிணி கதாநாயகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் விபத்து நடந்தவுடன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வருவார்களே. விசாரிப்பார்களே. அதில் ஆபரேஷன் செய்யும் தனியார் சர்ஜன் குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்து உயிருடன் இல்லை என்றவுடன் ஒரு பையில் போட்டு நர்ஸ் ப்ரித்விகாவிடம் கொடுத்து விடுகிறார். அவர் எடுத்துச் செல்லும் வழியில் குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிந்தவுடன் தன் வீட்டில் கொண்டுபோய் வைத்து வளர்க்கிறாராம். எந்த மாநகராட்சியில் எப்படி பதிவு செய்வார். காதில் இன்னொரு பூ.

  பிரேத பரிசோதனை செய்பவர் விபத்து சட்ட அறிவு இல்லாமலா இருப்பார்?

  பிரேத பரிசோதனை செய்பவர் விபத்து சட்ட அறிவு இல்லாமலா இருப்பார்?

  அடுத்து அந்த மருத்துவமனையில் கதாநாயகியின் இதயத்தை ஏபி நெகட்டிவ் ரேர் குரூப் என்பதால் திருடி ஒருவருக்கு 2.5 கோடி ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்களாம். இது தெரிந்த அமலாபால் அய்யோ இதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். பிரேத பரிசோதனை நிபுணருக்கு விபத்து போலீஸ் நடைமுறை தெரியாமலா இருக்கும்? ரித்விகா அந்த டாக்டர் லேப்டாப்பில் உள்ள ரிப்போர்ட்டை திருடிட்டு வான்னு அனுப்புகிறாராம். அவர் ஆப்பிள் லாப் டாப்பையே பாஸ்வார்டு இல்லாமல் ஓப்பன் செய்து காப்பி பண்ணும்போது டாக்டர் வர பின்னர் அவர் மீது ஆசிட்டை ஊற்றி விபத்துபோல் காண்பித்து ரித்விகாவை கொல்கிறார்களாம்.

  காதில் கூடைப்பூ வைக்கும் இடம்

  காதில் கூடைப்பூ வைக்கும் இடம்

  ஒரு விபத்தில் சிக்கும் பாதிக்கப்பட்டவரின் இதயத்தை திருடிவிட்டு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தப்பிக்க முடியுமா? சிகிச்சை அளிக்கும் வரைதான் தனியார் மருத்துவமனை. உயிர் போய்விட்டால், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட பெண் உயிரிழந்த உடலை அரசு மருத்துவமனை பிணவறைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்புவார்கள். பிரேத பரிசோதனை ரிப்போர்ட் பைக்கிலிருந்து கீழே விழுந்தது இன்ன பிற காரணங்களுக்காக உயிரிழப்பு என சர்டிபிகேட் தந்தப்பிறகு போலீஸ் ஒரு ரிப்போர்ட் தரும் அதை வாங்கி பாடியை பெற்றுச் சென்று அடக்கம் செய்ய முடியும். இந்த நடைமுறை போலீஸ் சர்ஜன் அமலா பாலுக்கு நன்றாக தெரியுமே. அவர் போலீஸுக்கு போகாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாதுன்னு ரிப்போர்ட்டை ஏன் திருடச் சொல்லணும்.

  4 வருடமாக மண்ணில் புதைந்த உடல் நேற்று புதைத்தது போல் இருக்காம்

  4 வருடமாக மண்ணில் புதைந்த உடல் நேற்று புதைத்தது போல் இருக்காம்

  அதன் பின்னர் நடப்பதுதான் செம காமெடி. கதாநாயகி உடலை பிரேத பரிசோதனைக்காக தோண்டுகிறார்களாம். நான்கு ஆண்டுகள் கழிந்தப்பின்னரும் உடல் நேற்று புதைத்ததுபோல் இருக்கிறது. அதற்கு மெடிக்கலாக சில காரணங்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டால் சில மாதங்களாக இருந்தால் அப்படி இருக்க வாய்ப்புள்ளது, 4 ஆண்டுக்கு முன் புதைத்த பிணம் அப்படியே நேற்று புதைத்தது போல் இருப்பது சாத்தியமே இல்லை என்கிறார்.

  நெருடலோ நெருடல் ஜம்ப் ஆகும் காட்சிகள்

  நெருடலோ நெருடல் ஜம்ப் ஆகும் காட்சிகள்

  அடுத்து அங்கும் போஸ்ட்மார்ட்டம் செய்யும் அமலாபால் பாடியை பார்த்தவுடனேயே திகைத்துப்போய் விடுகிறாராம். பாடி இப்பத்தான் போஸ்ட் மார்ட்டமே செய்யப்படுகிறதுன்னு சொல்கிறார். இதயம் இல்லாததையும் கண்டுபிடிக்கிறாராம். பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் எப்படி தர முடியும் வாய்ப்பே இல்லையே. பிறகு மற்றொரு சீனில் போஸ்ட் மார்ட்டம் நிபுணர் அமலாபால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுகளை மருத்துவ மாணவிகளுக்கு ரெஃபரன்ஸுக்காக தரும்போது அதில் கதாநாயகியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் இருக்கிறதாக காட்டுகிறார்கள். இவரை எனக்குத்தெரியுமேன்னு அமலாபால் சைடு கேப்பில் ஒரு ஃபிளாஷ்பேக் வேறு போய்விட்டு வந்து விடுகிறார். எத்தனை முரண்பாடு.

  அட இதுவும் போலீஸ் சர்ஜன் பணியில் வருதா?

  அட இதுவும் போலீஸ் சர்ஜன் பணியில் வருதா?

  இதில் அமலாபால் கொலை வேறு செய்கிறார். அதன் பின்னர் கொலையாளியை பிடிக்கும் எந்த முயற்சியிலும் ஏசி ஈடுபட வில்லை. கொலையாளி அடுத்து யாரைக்கொல்வார் என்று சாபூத்ரி போட்டு பார்க்கிறார்கள். இதில் பப்ளிக்காக அந்த இதயத்தை தானமாக பெற்றவர் வந்து அவர்கள் பெயரை சொல்லுங்கன்னு அறிவிப்பு வேறு. இடையில் திடீரென ஏசியை அழைக்கும் உள்துறை அமைச்சர் உன்னை டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டேன் போ என்கிறார். எந்த ஊரில் உள்துறை அமைச்சர் (நம்மூரில் போலீஸ் அமைச்சர் முதல்வர்) ஒரு சாதாரண ஏசியை டிரான்ஸ்ஃபர் செய்ய நேரில் அழைத்து சொல்வார்.

  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர் கைரேகையை பிரிக்கும் காமெடி

  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர் கைரேகையை பிரிக்கும் காமெடி

  அதன் பின்னர் இன்னும் காமெடி இதயத்தை நாங்கத்தாண்டா எடுத்து விற்றோம், 2.5 கோடின்னா சும்மாவான்னு அமைச்சர், ஏடிஜிபி எதிரிலேயே செத்துப்போன டாக்டரின் அப்பா ஏசியை மிரட்டுகிறாராம். அதன் பின்னர் அவரும் கடத்தப்படுகிறார். இப்படி எத்தனை முரண்கள் கதையில், லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் காட்சிகள். செய்த்துப்போனவர் கைரேகையை அப்படியே பிரித்து எடுத்து சொல்யூஷனில் போட்டு பயன்படுத்துவார்களாம். சொல்யூஷனில் போட்டு தோலை பாதுகாக்க முடியுமா? சொல்யூஷனில் இருக்கும் கைரேகை மட்டுமா ஒட்டும் சொல்யூஷன் ஒட்டாதா? தடயவியல் நிபுணர்கள் அதை கண்டுபிடிக்க மாட்டார்களா?

  லாஜிக் இல்லாமல் குற்ற நடவடிக்கைகளை பதிவு செய்யும் படங்கள்

  லாஜிக் இல்லாமல் குற்ற நடவடிக்கைகளை பதிவு செய்யும் படங்கள்

  இப்படி படம் முழுவதும் பல லாஜிக் மீறல்கள். இதை சிறந்த கிரைம் படம் என்று அனைத்து விமர்சனங்களும் வந்ததால் நெருடிய விஷயங்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு ஓய்வுப்பெற்ற போலீஸ் சர்ஜன், காவல் அதிகாரிகளிடம் கேட்டு பதிவிடப்பட்டுள்ளது. கடாவர் படம் மட்டுமல்ல பல படங்கள் அப்படித்தானேன்னு கேட்பவர்கள் நல்ல விஷயம் முதற்கட்டமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். 10 பேரை ஹீரோ அடிப்பது இன்னும் பல நம்ப முடியாத காட்சிகள் திரைப்படத்தில் மெருகூட்ட வைக்கப்படுகிறது, ஆனால் லாஜிக் இல்லாமல் காட்சிகள் வைப்பதும், சட்ட குற்ற நடைமுறைகளை தவறாக பதிவு செய்வதும் தவறு. இதை பார்ப்பவர்கள் இதை சரி என நம்பும் வாய்ப்பு உள்ளது.

  Recommended Video

  Thrigun | பெண்கள் கொடுக்கும் ஹாஷ்டாக் தான் வண்டி ஓடுது | *INTERVIEW
  சம்பந்தப்பட்ட நிபுணர்களின் அறிவுரைக் கேட்காமல் எடுத்தால் கேலிகிண்டல் தான் கிடைக்கும்

  சம்பந்தப்பட்ட நிபுணர்களின் அறிவுரைக் கேட்காமல் எடுத்தால் கேலிகிண்டல் தான் கிடைக்கும்

  நடிகை அமலாபால் ஒரு தயாரிப்பாளராக, அதுவும் ஒரு பெண் இவ்வாறு இண்டஸ்ட்ரியில் வருவது வரவேற்கத்தக்க ஒன்று. இது அவரது படத்தைப் பற்றிய விமர்சனம் மட்டுமே, படம் எடுப்பவர்கள் குறைந்தப்பட்சம் அது சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்கள் அல்லது பணியாற்றி ஓய்வுப்பெற்றவர்கள் கருத்தைக் கேட்டு பதிவு செய்தால் அந்தப்படம் சரியான படமாக இருக்கும். அப்படி பல படங்கள் வெளிவந்துள்ளன. தான் நினைப்பதே சரி, அதுதான் படம் என எடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் கேலிக்கு ஆளாக நேரிடும். அது எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் விமர்சனம் வந்தே தீரும். இதற்கு உதாரணம் சமீபத்தில் வந்த வலிமை, பீஸ்ட் படங்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்ததை சொல்லலாம்.

  English summary
  Actress Amala Pal's Kadavar movie is being reviewed. Amala Paul has collected praise as a crime story by nicely taking a story without logic.,
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X