twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பவர்ஸ்டார், சன்னி தியோல், சத்ருகன் .. திரைவானில் ஜொலித்த நட்சத்திரங்கள் தேர்தலில் ஜெயித்தார்களா..?

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திரையுலக நட்சத்திரங்களின் வெற்றி, தோல்வி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    By Staff
    |

    டெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்களில் பலர் வெற்றி பெற்றுள்ளனர், சிலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

    17வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தலில் மக்களுக்கு நன்கு அறிமுகமான பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தனர். பிரச்சாரத்தில் அவர்களை நேரில் பார்ப்பதற்கென்றே ஒரு பெரிய கூட்டமே கூடியது.

    lok sabha election 2019 results filmstars results

    ஆனால் அது தேர்தல் முடிவுகளில் அப்படியே எதிரொலித்ததா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு சிலரைத் தவிர பலருக்கு தேர்தல் முடிவுகள் கசப்பாகத் தான் வந்திருக்கிறது.

    சிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா? சிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா?

    அப்படியாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திரைபிரபலங்களின் தேர்தல் முடிவுகள் உங்களுக்காக...

    - நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் போட்டியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான். புதுமையாக பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய இவருக்கு, 54 574 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

    - கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக சிவகங்கையில் களமிறங்கினார் பாடலாசிரியர் சினேகன். அங்கு அவர் 22,846 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

    - தென் சென்னைத் தொகுதியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், வெறும் 665 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    - பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்டார் நடிகர் சன்னிதியோல். அவர் தனது தொகுதியில் 5,51,177 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

    - மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார் நடிகை ஊர்மிளா. அவர் 2,40956 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

    - மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூரில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய நடிகை மிமி சக்கரவர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

    - பீஹார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் சத்ருஹன் சின்கா. ஆனால், அவரால் அங்கு வெற்றி பெற இயலவில்லை. 3,21,840 வாக்குகள் பெற்று அவர் தோல்வியடைந்துள்ளார். சத்ருஹனின் மனைவி பூனம் சின்ஹா, லக்னோவில் அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

    - கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். அவருக்கு 28,822 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

    - கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் நடிகை சுமலதா. 7,02,167 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    - உத்தரபிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய நடிகை ஹேமமாலினி, 6,67,342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    - ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய நடிகை ஜெயப்பிரதா, சமாஜ்வாதி நட்சத்திர வேட்பாளர் ஆசம் கானிடம் தோற்றார்.

    - உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் சிக்ரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார் நடிகர் ராஜ்பாபர். இவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனது உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    - ஜன சேனா கட்சியின் வேட்பாளராக பீமாவரம் மற்றும் கஜுவேகா தொகுதியில் போட்டியிட்டார் நடிகர் பவன் கல்யாண். ஆனால் முறையே 58,283 மற்றும் 62,285 என இரண்டு தொகுதிகளிலும் குறைந்த வாக்குகளே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

    - பாஜக வேட்பாளராக உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் ரவி கிஷான், 7,15,010 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

    - சண்டிகரில் பாஜக சார்பில் களமிறங்கிய நடிகர் கிரோன் கெர், 2,30,967 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    English summary
    The 2019 elections has seen the rise of film celebrities venturing into politics, whilst there were seasoned film personalities turned politicians facing re-elections. Here is the list of such politicians and their electoral performance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X