கமல் மட்டும் அல்ல அவர் பட ஹீரோயினும் லோக்சபா தேர்தலில் போட்டி?
மும்பை: லோக்சபா தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கரை காங்கிரஸ் நிறுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் மும்பை வடக்கு பகுதியில் காங்கிரஸ் சார்பில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர்(45) போட்டியிடக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பையில் உள்ள 6 லோக்சபா தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. ஊர்மிளா உறுதி செய்யப்பட்டால் அவர் பாஜக எம்.பி. கோபால் ஷெட்டியை எதிர்த்து போட்டியிடுவார்.
முன்னதாக 2004ம் ஆண்டு இதே தொகுதியில் தான் பாலிவுட் நடிகர் கோவிந்தா முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக்கை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்மிளா மடோன்கர் ஜாகோல்(1990) என்கிற மராத்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அப்பொழுது அவருக்கு வயது 7. வளர்ந்த பிறகு பல பாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடித்த இந்தியன் படத்திலும் நடித்துள்ளார் ஊர்மிளா.


Click it and Unblock the Notifications











