Lokah X Review: சூப்பர் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷனுக்கு கலக்கல் வெற்றி.. லோகா ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: துல்கர் சல்மான் தயாரிப்பில் சூப்பர் ஹீரோயினாக நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷனின் லோகா திரைப்படம் இன்று வெளியான நிலையில், அந்த படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் டிரெண்டாகி வருகிறது. நேற்று நடைபெற்ற சிறப்புக் காட்சியிலேயே லோகா படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹீரோ படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

Lokah X Review in Tamil Kalyani Priyadarshan rocks as a super hero in Dulquer Salman movie
Photo Credit:

சிம்புவின் மாநாடு படமும் டைம் லூப் என்கிற வித்தியாசமான கான்செப்ட் படமாக உருவானது. அந்த படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். இந்நிலையில், பிரேமலு ஹீரோ நஸ்லென் உடன் இணைந்து சூப்பர் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா படம் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களைபோல சூப்பராக இருப்பதாக நெட்டிசன்கள் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

வின்னர் லோகா: துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ படமான லோகா சாப்டர் ஒன்: சந்திரா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். லோகா திரைப்படம் மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு கிடைத்த மிகப்பெரிய வெற்றிப் படம் என்றும் கேமியோக்கள் எல்லாம் சரியான இடத்தில் கச்சிதமாக வந்து செல்கின்றனர் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

மலையாள படமான்னே நம்ப முடியல: நடிகர் மம்முட்டி தனியாக மம்முட்டி கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் துல்கர் சல்மான் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வரும் நிலையில், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films சார்பில் ஹாலிவுட் தரத்தில் தயாரித்துள்ள படம் தான் லோகா. இதுவொரு ஒன் டைம் வொண்டர் என்றும் இது மலையாள படம் என்றே நம்பமுடியவில்லை. அந்தளவுக்கு படம் செம குவாலிட்டியாகவும் சிஜி காட்சிகள் எல்லாம் தரமாக வந்திருப்பதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

துல்கர் சல்மானுக்கு நன்றி: மலையாளத்தில் இருந்து இப்படியொரு ஹாலிவுட் தரமான படத்தை எதிர்பார்கக்வே இல்லை. பாஸ் துல்கர் சல்மானுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநர் டோமினிக் அருண் கேட்டதை எல்லாம் சரியாக கொடுத்த நிலையில், ப்ரொடக்‌ஷன் வேல்யூ உள்ள பக்காவான படமாக வந்திருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக பான் இந்தியா ஹிட் அடிக்கும். அதற்கான ப்ரோமோஷன் பணிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்தால் சிறப்பான வசூல் வேட்டையை பார்க்கலாம் என இந்த ரசிகர் கூறியுள்ளார்.

கல்யாணி கலக்கிட்டாங்க: இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை கேட்டு நடித்து வரும் நிலையில், இந்த முறை மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்துடன் போட்டியாக களமிறங்கி கலக்கிவிட்டார் என மலையாள ரசிகர்கள் ஒருமுறை பார்த்த பின்னர் மீண்டும் இன்னொரு முறை படம் பார்க்க செல்வதாக தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X