விஜய் - த்ரிஷா இடையில் லவ் சீன்ஸ்.. லோகேஷ் கனகராஜ் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார்.

தளபதி 67 படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை. மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் பங்கேற்றுள்ளனர்.

இந்த சூட்டிங்கை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக காஷ்மீரில் சூட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்கவுள்ளார்.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தின் பூஜை எளிமையாக போடப்பட்டு தற்போது கொடைக்கானலில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை.

கொடைக்கானலில் சூட்டிங்

கொடைக்கானலில் சூட்டிங்

மாறாக கொடைக்கானல் சூட்டிங்கில் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளனர். இந்த சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழு அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு பயணப்பட உள்ளது. இந்த சூட்டிங்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

விஜய் -த்ரிஷா ஜோடி

விஜய் -த்ரிஷா ஜோடி

படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் 50 வயது கேங்ஸ்டராக படத்தில் நடிக்கவுள்ளதாகவும் படம் 100 சதவிகிதம் லோகேஷ் கனகராஜின் படமாக இருக்கும் என்றும் முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய இன்டர்வியூவில் தெரிவித்திருந்தார்.

 மாணவர்களுடன் லோகேஷ் உரையாடல்

மாணவர்களுடன் லோகேஷ் உரையாடல்

இந்நிலையில் நேற்றைய தினம் கோவையில் கல்லூரி விழாவொன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது, தளபதி 67 படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருக்கிறாரா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த லோகேஷ், விரைவில் இதுகுறித்து தெரியவரும் என்று பதிலளித்தார்.

விஜய் -த்ரிஷா லவ் சீன்ஸ்

விஜய் -த்ரிஷா லவ் சீன்ஸ்

தொடர்ந்து, விஜய் -த்ரிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தில் இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கு இடையில் லவ் சீன்களை எதிர்பார்க்கலாமா என்றும் மாணவர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த லோகேஷ் எதிர்பார்க்கலாம் என்று பதிலளித்தார். இதையடுத்து படத்தில் த்ரிஷா நடிப்பதை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

100% லோகேஷ் படம்

100% லோகேஷ் படம்

முன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ள லோகேஷ் கனகராஜ், அந்தப் படத்தில் 50 சதவிகிதம் மட்டுமே தனது ஸ்டைலில் எடுத்ததாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, தளபதி 67 படத்தை 100 சதவிகிதம் தன்னுடைய ஸ்டைலில் எடுக்கவிருப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X