தளபதியை வாரி அணைத்துக் கொண்ட லோகி, அட்லீ, நெல்சன்.. தளபதி பாய்ஸ்னா சும்மாவா? பார்க்க எவ்வளவு அழகா இருக்கு
மலேசியா: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் மற்றும் அட்லீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இப்படி இருக்கும்போது, இவர்கள் மூவரும் விஜயைக் கட்டிப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜன நாயகன் படத்தில் இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மூவரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் இவர்கள் மூவரும் பத்திரிகையாளர்களாக நடித்துள்ளார்களாம். ஏற்கனவே இவர்கள் மூவரும் தளபதி விஜயை இயக்கி அவருக்கு மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தவர்கள்.

தளபதி பாய்ஸ்: இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் மற்றும் லியோ படத்திலும், அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள். அவர்களின் திரை வாழ்க்கையில் விஜய் தான் முதலில் பெரிய கதாநாயகன். இப்படி இருக்கும்போது அவர்கள் மூவரும் விஜய்க்கு நன்றி சொல்லும் விதமாக அவரது கடைசி படத்தில் நடித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இசை வெளியீட்டு விழாவிலும் உரிமையுடன் கலந்து கொண்டுள்ளனர்.

ஏ.ஐ: இந்நிலையில் நமது நெட்டிசன்கள் தங்களது ஆசையை அழகாக வெளிப்படுத்தும் விதமாக இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் விஜயை இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் என மூவரும் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவது போல ஒரு ஏ.ஐ. புகைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். மேலும் விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ள நடை பாதையில் ரசிகர்களை நோக்கி இரண்டு கைகளையும் விரித்தபடி நடிகர் விஜய் நடந்து வருவது போலவும் ஒரு ஏ.ஐ. புகைப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் இதை வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











