அட்லி கேரக்டரை கையில் எடுக்கும் லோகேஷ்..தளபதி 67ல் விஜய்க்கு இப்படி ஒரு ரோலா?
சென்னை : நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் அவ்வப்போது லீக்காகி வருகிறது. இதையடுத்து தற்போது பாதுகாப்பான இடத்தில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது தளபதி 66 படத்தில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் முழு மூச்சுடன் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஐதராபாத்திலும் இந்த முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பீஸ்ட் படம்
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாகவே அமைந்தது. அதனால் படக்குழுவினருக்கு சக்சஸ் பார்ட்டி கொடுத்தார் விஜய். இந்த பார்ட்டியின் புகைப்படத்தை படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

வாரிசு சூட்டிங்
இந்நிலையில் தற்போது விஜய் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோழா என்ற சிறப்பான படத்தை தமிழில் கொடுத்த வம்சி படிப்பள்ளி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது.

பொங்கல் ரிலீஸ்
இவை இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே தூண்டியுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்தப் படத்தை கொண்டாட தற்போதே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டைட்டில் ரிலீசானது.

தளபதி 67 படம்
வாரிசு என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்திற்காக இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாகவும் விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

60 வயது கேங்ஸ்டர்
முன்னதாக இந்தப் படத்தில் 40 வயது கேங்ஸ்டராக விஜய் நடிப்பதாகவும், அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்பட்டது. படத்தில் சமந்தா ஜோடி சேரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது விஜய் 60 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றன.

ராயப்பன் கேரக்டர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த ராயப்பன் என்ற கேங்ஸ்டர் கேரக்டர்கள் ரசிகர்களின் எவர்கிரீன் கேரக்டராக மாறியுள்ள நிலையில், தற்போது இதேபோன்ற கேரக்டரை லோகேஷ் கையில் எடுத்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பு வெளியானால் தான் படம் குறித்து பேசுவேன் என்று முன்னதாக லோகேஷ் கூறியுள்ள நிலையில், விரைவில் இந்த தகவலை அவர் தெளிவுப்படுத்துவார் என்று நம்பலாம்.
Recommended Video

அட்லி விருப்பம்
முன்னதாக ராயப்பன் கேரக்டரை வைத்து மட்டுமே படமியக்கினால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை பிரபல இசை நிறுவனம் தனது ட்விட்டரில் எழுப்பியிருந்தது. அதற்கு இயக்குநர் அட்லி செஞ்சிட்டா போச்சு என்று விஜய் பாணியில் பதிலளித்திருந்தார். இந்நிலையில் ராயப்பன் போன்ற கேரக்டரில் விஜய்யை லோகேஷ் கொண்டுவருவது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











