தளபதி 67 தகவல் உண்மை தானா...லோகேஷ் கனகராஜ் என்ன சொல்றார் தெரியுமா?

சென்னை : ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளதை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. சென்சார் போர்டு ஒப்புதல் கிடைத்ததும் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்து அறிவிக்க போகிறார்களாம்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் பைலிங்குவல் படத்தில் விஜய் நடிக்க போகிறார் என்பதை ஏற்கனவே அறிவித்து விட்டனர். இந்த படத்தின் மூலம் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க போகிறார் விஜய். தளபதி 66 படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி விட்டது.

அடுத்தடுத்த அறிவிப்புக்கள்

அடுத்தடுத்த அறிவிப்புக்கள்

இதைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை டைரக்டர் லோகேஷ் இயக்க போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. இந்த படத்தில் ஹீரோயின், பாடல்கள் என ஏதும் கிடையாது என கூறப்படுகிறது. எப்படி அஜித்தின் ஏகே 61 ஷுட்டிங் துவங்குவதற்கு முன்பே ஏகே 62 படம் பற்றிய அறிவிப்பை லைகா வெளியிட்டுள்ளதோ அதே போல் விஜய்யின் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 67 தகவல் உண்மையா

தளபதி 67 தகவல் உண்மையா

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். இதனால் தளபதி 67 படத்தில் இவர் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள குதிரைவால் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதை பார்ப்பதற்காக டைரக்டர் லோகேஷ் கனகராஜும் வந்திருந்தார். அவரிடம் தளபதி 67 பற்றிய தகவல் உண்மை தானா என கேட்கப்பட்டது.

லோகேஷ் என்ன சொல்றார்

லோகேஷ் என்ன சொல்றார்

அதற்கு பதிலளித்த லோகேஷ், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தயாரிப்பு நிறுவனம் தான் அது பற்றி முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஒருவேளை இந்த படம் உறுதியானால் அனைத்தும் முடிவான பிறகு அறிவிப்பு வெளியிடப்படும். அனைத்து நல்ல படியாக முடிந்தால் இந்த படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவக்கப்படும் என்றார்.

வேறு யாரை இயக்க போகிறார்

வேறு யாரை இயக்க போகிறார்

மற்றொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், மாஸ்டர் ஷுட்டிங்கின் போதே விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி விட்டாராம் லோகேஷ். தற்போது அதற்கு திரைக்கதை உருவாக்கி வருகிறாராம். அதற்கு முன் கமலின் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த வேலையில் இறங்கி உள்ளார். கமலின் விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. விஜய் தற்போது தளபதி 66 படத்தில் கவனம் செலுத்த துவங்கி விட்டதால், தளபதி 67 படத்திற்கு முன் வேறு படத்தை லோகேஷ் இயக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X