லோகேஷ் கனகராஜ்ஜை அடிக்கணும் போல இருக்கு... கமலுக்காக வம்பிழுத்த நடிகர் மணிகண்டன்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார்.
முன்னதாக கடந்தாண்டு அவரது இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இதனிடையே லோகேஷ் தன்னை எப்போதுமே கமலின் தீவிர ரசிகன் என வெளிப்படுத்திக்கொள்வார்.
இந்நிலையில், யார் கமலின் தீவிர ரசிகன் என லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் நடிகர் மணிகண்டனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் வைரலாகி வருகிறது.

கமலின் தீவிர ரசிகன்
காலா, சில்லுக் கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் மணிகண்டன். நடிப்பில் மட்டும் இல்லாமல் கதை, திரைக்கதை எழுதுவது, இயக்கம் போன்றவற்றிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது விழாவில், ஜெய்பீம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை அவர் ஜெய்பீம் படத்தில் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டனுக்கு அதே மேடையில் வைத்தே கொடுத்துவிட்டார். அப்போது தான் நடிகர் கமலின் தீவிர ரசிகர் என கூறியிருந்தார்.

லோகேஷை அடிக்கணும்
அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, லோகேஷ் கனகராஜ் அடிக்கடி தன்னை கமல் ரசிகர் எனக் கூறும் போதெல்லாம், அவரை அடிக்க வேண்டும் போல உள்ளதாக உளறிக் கொட்டினார். பலபேர் முன்னிலையில் மேடையில் வைத்தே மணிகண்டன் அப்படி பேசியதை லோகேஷ் கனகராஜ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போது அவரது முகம் கொஞ்சம் இறுக்கமாக மாறினாலும், அதனை அவர் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை.

பதிலடி கொடுத்த லோகேஷ்
ஆனால், அதன்பின்னர் அதே மேடையில் லோகேஷ் கனகராஜ்ஜும் விருது பெற சென்றார். அப்போது மேடையில் பேசிய அவர், எத்தனை மணி வந்தாலும் நான் தான் கமல் சாரின் முதல் ரசிகன், அதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றார். இருவரும் ஒரே மேடையில் போட்டிப் போட்டுக்கொண்டு கமலுக்காக வரிந்துக்கட்டியது அங்கிருந்தவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், கமலின் தீவிர ரசிகன் யார் என அடிச்சுக் காட்டுங்கப்பா என ட்ரோல் செய்தனர்.

விக்ரம் 2 உருவாகுமா?
விக்ரம் படம் மூலம் கமலுக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ், அடுத்து கைதி 2வில் கமிட் ஆகியுள்ளார். கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியளவிலும் உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











