விக்ரம், லியோ ஸ்டைல். கூலி படத்தின் எல்லா வேலைகளும் ஓவர்.. அனிருத் பற்றி லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி

சென்னை: கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கின்றன. மிகப்பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கும் நிலையில் படத்தில் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்திருக்கும் அனிருத் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்திய திரைத்துறையிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படமாக அமைந்திருக்கும் கூலி. முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைந்திருப்பதாலும், பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் களமிறங்கியிருப்பதாலும் இயல்பாகவே ஹைப் ஏறியிருக்கிறது. இப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்பது திரைத்துறை ஆர்வலர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

என்ன கதை?: படம் டைம் ட்ராவல் பற்றிய கதை, வாட்ச் கடத்தல்தன் படத்தின் கதை, இல்லை இல்லை போதை கடத்தல்தான் படத்தின் கதை என கூலி கதையை பற்றி நாளொரு கதை வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் டைம் ட்ராவல் எல்லாம் இல்லை; வாட்ச் ஃபேக்டரி ஒரு தீம்தான் என சமீபத்தில் கொடுத்த பேட்டியில் லோகேஷ் தெளிவுப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj and Anirudh have completed all the work on Rajinikanth s Coolie
Photo Credit:

டிக்கெட் புக்கிங் சூப்பர்: படத்தின் டிக்கெட் புக்கிங் மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. கேரளாவில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் விற்று தீர்ந்தது. தமிழ்நாட்டிலும் புக்கிங் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. முன்பதிவில் மட்டுமே கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்வரை படம் வசூலித்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓட ஆரம்பித்திருக்கிறது.

அனிருத்தின் பங்கு: இப்படத்தில் லோகேஷ் - ரஜினியின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலரிடம் எப்படி எழுந்திருக்கிறதோ; அதேபோல்தான் அனிருத்தையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். இதுவரை ரஜினிக்கு அவர் இசையமைத்த பேட்ட, தர்பார், வேட்டையன், ஜெயிலர் என அனைத்து படங்களிலுமே பாடல்கள், பின்னணி இசை அனைவரையும் கவர்ந்தன. கூலியிலும் அவர் இசையமைத்த பாடல்களில் இரண்டு பாடல்கள் ஹிட்டாகிவிட்டன.

வேலையை முடித்த அனிருத்: பட ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில்; கடந்த சில நாட்களாகவே படத்துக்கு இசையமைக்கும் இறுதிக்கட்ட பணிகளை தனது டீமுடன் மும்முரமாக செய்துவந்தார் அனி. இந்நிலையில் இப்போது படத்தின் வேலைகள் முடிந்துவிட்டன. விக்ரம், லியோ படங்களின் இறுதி பணிகள் முடிந்தபோது எப்படி அனிருத்தும், லோகேஷும் இருந்த புகைப்படம் வெளியானதோ; அதேபோல் இப்போது கூலிக்கும் வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் அனி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "நான்கு முறை இணைந்திருக்கிறோம். ஒவ்வொருமுறையும் பிளாஸ்ட்தான். இன்னொரு தாயிடமிருந்து வந்த என் சகோதரர் அனிருத்துக்கு ஐ லவ் யூ" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X