40 வருஷம் செட்லயே இருந்த கமல்.. அனிருத், லோகேஷ் போட்ட கணக்கு.. பிக் பாஸ் வீட்டில் ‘விக்ரம்’ டீசர்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'விக்ரம்' பட டைட்டில் டீசரை வெளியிட்டார் கமல்ஹாசன்.

லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர்.

பிக் பாஸ் போட்டியாளர்களும் டீசரை அகம் டிவி வழியே கண்டு விசில் அடித்து ரசித்து பாராட்டினர்.

கமல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

கமல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்‌ஷன் பரபரப்புகள் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால், கொண்டாட்ட மோடிலே சென்றது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் செய்த கேக்கை கமல் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கே திருப்பி அனுப்பினார். கமலுக்காக பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர் பட பாடல்களை பாடி வாழ்த்தினர். சுசித்ரா வாய்ஸ் இப்பவும் சத்தமா கேட்கல!

விக்ரம் டைட்டில் டீசர்

விக்ரம் டைட்டில் டீசர்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் இன்னும் வெளியாகாத நிலையில், தனது அடுத்த இயக்கத்தை நோக்கி லோகேஷ் கனகராஜ் நகர்ந்து விட்டார். ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் கமல் நடிப்பில் ‘விக்ரம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். அதன் டைட்டில் டீசரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ரிலீஸ் செய்தனர்.

இரு தூண்கள்

இரு தூண்கள்

'விக்ரம்' படத்தின் இரு தூண்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்தை பிக் பாஸ் மேடைக்கு கமல் அழைத்தார். இருவரும் தயங்கி தயங்கி வந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு, படத்தின் டீசர் பற்றியும், டைட்டில் ரிலீசுக்கு ஒரு டீசரை உருவாக்கிய ஐடியாவையும், கமல் சாரின் ஈடுபாட்டையும் புகழ்ந்து பேசினர்.

40 வருஷம் செட்லயே

40 வருஷம் செட்லயே

66வது பிறந்தநாளை கொண்டாடும் கமல்ஹாசன், 231 படங்களில் இதுவரை ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ளார். தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 40 வருஷம் செட்லயே கழித்துள்ளார் என்கிற அபாரமான கணக்கை லோகேஷ் கனகராஜும், அனிருத்தும் சேர்ந்து போட்டதையும் பகிர்ந்து கொண்டு, கமலையும் ரசிகர்களை மகிழ்வித்தனர்.

பிக் பாஸ் வீட்டில் விக்ரம் டீசர்

பிக் பாஸ் வீட்டில் விக்ரம் டீசர்

பிக் பாஸ் வீட்டுக்குள், செல்ஃபோன், டிவி என எந்தவொரு வெளி உலக தொடர்பும் இல்லை. செய்தி பார்க்கவோ, அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றி பெற்றதையோ அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. அப்படின்னு சொல்றாங்க, நம்புவோம். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டின் அகம் டிவியில் ‘விக்ரம்' டைட்டில் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது.

விசில் அடித்த ரம்யா பாண்டியன்

விசில் அடித்த ரம்யா பாண்டியன்

துப்பாக்கி, கத்தி எல்லாம் வீட்டின் எல்லா இடங்களிலும் ஒளித்து வைத்து, தலை வாழை இலை போட்டு அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும், போலீஸ்காரர்களையும் சாப்பிட வைத்து சம்ஹாரம் பண்ணும் விக்ரமாக கமல் மாறியுள்ள டீசரை பார்த்த உடனே எல்லா போட்டியாளர்களும் பாராட்டி தள்ளினார்கள், ரம்யா பாண்டியன் ஸ்பெஷல் விசிலையும் அடித்தார். ரியோ ராஜ் இயக்குநர் லோகேஷுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறினார்.

இதாவது தியேட்டருக்கு வருமா?

இதாவது தியேட்டருக்கு வருமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்னதாக தேவர்மகன் 2 (அ) தலைவன் இருக்கின்றான், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் குறித்த அறிமுக நிகழ்ச்சிகள் நடந்தேறின. ஆனால், அந்த இரண்டு படங்களின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மற்ற தயாரிப்பாளர்களை நம்புவதை விட்டு விட்டு சொந்த தயாரிப்பிலே கமல் இந்த படத்தை தயாரிக்கிறார். இதாவது சீக்கிரம் திரைக்கு வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X