Lokesh Kanagaraj- ரூட்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்- வாழ்த்திய பிரபல இயக்குநர்.. அப்போ அது கன்ஃபார்ம்தானா?

சென்னை: Lokesh Kanagaraj, Anirudh (லோகேஷ் கனகராஜ், அனிருத்) லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோரின் புது ரூட்டை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். அதேபோல் பிரபல இயக்குநர் வாழ்த்தவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ்தான் இப்போது சென்சேஷ்னல் இயக்குநர். இதுவரை அவர் நான்கு படங்கள்தான் இயக்கியிருக்கிறார். ஆனால் அவருக்கென்று பல தயாரிப்பாளர்கள் போட்டிப்போட ஆரம்பித்திருக்கின்றனர். அதற்கு ஒரே காரணம் லோகேஷ் கொடுத்த ஹிட்டுகள். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் சூப்பர் ஹிட்டாகின. ஆனால் விக்ரம் படமோ மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

லியோ லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார். விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. சமீபத்தில் காஷ்மீரில் முடிந்த இதன் ஷூட்டிங் இப்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டாம் என விஜய் கூறியதால் படத்தை முழுக்க முழுக்க செட்டிலேயே முடிக்கப்போகிறார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

Lokesh Kanagaraj And Anirudh Will Act in Movie

ரஜினியுடன் இணையும் லோகேஷ்?: இந்தச் சூழலில் லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ரஜினியை வைத்து லோகேஷ் படம் இயக்கப்போவதாக ஒரு தகவல் பரபரத்துக்கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

Lokesh Kanagaraj And Anirudh Will Act in Movie

போட்டிப்போடும் தயாரிப்பாளர்கள்: எகிறிய சம்பளம்: ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டாலும் அப்படத்தை தயாரிக்க கடும் போட்டி நிலவுகிறதாம். அந்த ரேஸில் சன் பிக்சர்ஸ், கேஜிஎஃப் படத்தை தயாரித்த கோம்பாலே பிலிம்ஸ், வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜு ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப்போடுவதால் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 50 கோடி ரூபாய்வரை ஏறியிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். இந்தத் தகவல் ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

லோகேஷின் புதிய அவதாரம்: இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் புதிய அவதாரம் எடுக்கப்போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்களாம். இதில் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அவரோடு அனிருத்தும் தோன்றவிருப்பதாக தெரிகிறது. அனிருத் சில பாடல்களிலும், லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திலும் ஏற்கனவே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj And Anirudh Will Act in Movie

பிரபல இயக்குநரின் வாழ்த்து: இந்தத் தகவல் உண்மையா என ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருந்த சூழலில் பிரபல இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி லோகேஷ், அனிருத், அன்பறிவ் ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து, "வாழ்த்துக்கள் செல்லங்களே.... வெல்வோம்" என குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ லோகேஷ் கனகராஜ் நடிப்பது கன்ஃபார்ம்தான் போல என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் ரத்னகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X