எதிர்க்க எதிர்க்க எழுவேன் என் ரசிகர்களுடன்.. தளபதி விஜய் பிறந்தநாள்.. வெளியானது மாஸ் போஸ்டர்!

சென்னை: தளபதி விஜய்யின் 46வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Vijay Birthday : வெளியான மாஸ் போஸ்டர்கள்!

நள்ளிரவே பிறந்தநாள் கொண்டாட்டத்தை களைகட்ட திட்டமிட்டு இருந்த ரசிகர்களுக்கு ஸ்பெஷல் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் திரை பிரபலங்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

#HBDTHALAPATHYVijay என்ற ஹாஷ்டேக்கை போட்டு வெறித்தனமாக நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சரித்திர நாயகன்

சரித்திர நாயகன்

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாடகி சோபனாவிற்கு மகனாக பிறந்த நடிகர் விஜய், கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் மாஸ்டராக பெரும் சத்தத்துடன் பிகில் அடித்து வருகிறார். பல சோதனைகளை கடந்த இந்த சரித்திர நாயகன் தமிழ் சினிமாவின் சாதனை நாயகனாக மாறி உள்ளார்.

பிறந்தநாள் போஸ்டர்

பிறந்தநாள் போஸ்டர்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கிளின்டன் ரோச் டிசைனில் உருவான இந்த போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

ஆளவா தலைவா

ஆளவா தலைவா

ஆளவா தலைவா என்றும், எதிர்க்க எதிர்க்க எழுவேன் என் ரசிகர்களுடன் என எழுதப்பட்டிருக்கும் வாசகங்களுடன் இருக்கும் மெர்சலான போஸ்டரை மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, பொருத்தமான வரிகள் என அந்த வாசகங்களையும் பதிவிட்டுள்ளார்.

வீரர்களுக்கு சமர்ப்பணம்

வீரர்களுக்கு சமர்ப்பணம்

சண்டியர் செளந்தர் எனும் மற்றொரு டிசைனர் உருவாக்கிய பிறந்தநாள் போஸ்டரையும் ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில், இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கு.

ஸ்பெஷல் டிசைன்

ஸ்பெஷல் டிசைன்

நகைச்சுவை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில், இன்னுமொரு தெறி மாஸான தளபதி விஜய்யின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். ஹேப்பி பர்த்டே தளபதி என இருக்கும் இந்த அட்டகாசமான போஸ்டரை ராக்கி விஜயன் உருவாக்கி உள்ளார்.

தோனி ரசிகர்கள்

தோனி ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் ரசிகர்களும் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அட்டகாசமான ஒரு போஸ்டரை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு சமூக வலைதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஹாஷ்டேக்குகளையும் போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X