லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி இணையும் "இனிமேல்" ..வெளியான அட்டகாசமான அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராஜ்கமல் நிறுவனத்துடன் இனிமல் என்ற மியூசிக் ஆல்பத்தில் இணைந்துள்ளார். "இனிமேல்" என்கின்ற அந்த மியூசிக் ஆல்பத்திற்கு கமல்ஹாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த பாடலை ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாநகரம், கதை, மாஸ்டர், விக்ரம் என குறுகிய காலத்திலேயே பெரிய இயக்குனராக வளர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் இவரின் மேக்கிங் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியது. லோகேஷ் ஒரு புதுமையான உலகத்தை படத்தில் காட்டியதால், லோக்கி யூனிவர்ஸ் என சிலர் அவர் கொண்டாடி வருகின்றனர்.

Lokesh Kanagaraj and Shruti Haasan to team up for Inimel music album

லோகேஷ் கனகராஜ்: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயை வைத்து அவர் இயக்கிய படமான லியோ தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சோஷியல் மீடியாவில், லியோ படம் பற்றியே அதிகம் விவாதிக்கப்பட்டது. இதுவே படத்திற்கு பெரிய ஹைப்பை உருவாக்கியது. அதேநேரம், அதுவே படத்திற்கு எதிர்மறையாகவும் மாறியது. ஏனெனில் படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகத்தில் திரைக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை என்று பலரும் கருத்தை சொல்ல லோகேஷ் கனகராஜ் அதை ஏற்றுக்கொண்டார்.

தலைவர் 171: தற்போது ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏனெனில், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்தால் அது வேறலெவலில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் ரஜினியுடன் நடித்து வருகின்றனர். வேட்டையன் படப்பிடிப்பு முடிந்தபின் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Lokesh Kanagaraj and Shruti Haasan to team up for Inimel music album

ஸ்ருதி ஹாசன் லோகேஷ்கூட்டணி: இது ஒரு புறம் இருக்க, கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் ஸ்ருதி ஹாசனுடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் கை எடுத்துள்ளது. அண்மையில், லோகேஷ் கனகராஜூம், ஸ்ருதியும் சேர்ந்து இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிட்டு, அந்த போஸ்டரில், Inimel Delulu is the New Solulu என்ற குழப்பான கேப்ஷன் இடம் பெற்றிரந்தது.

இது திரைப்படமா? அல்லது ஸ்ருதிஹாசனின் ஆல்பமா, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாரா? இல்லை நடிக்கிறாரா என கேட்டுவந்த நிலையில், தற்போது இருவரும் ஆல்பத்தில் இணைய உள்ளதாகவும் "இனிமேல்" என்கின்ற அந்த மியூசிக் ஆல்பத்திற்கு கமல்ஹாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த பாடலை ஸ்ருதிஹாசன் கம்போஸ் செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பங்கு என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் Introducing லோகேஷ் கனகராஜ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X