அட இது எப்ப.. ஸ்ருதிஹாசன் உடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த லோகேஷ் கனகராஜ்.. தீயாக பரவும் புகைப்படம்!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'இனிமேல்' எனும் வீடியோ ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்தது சோஷியல் மீடியாவில் பல மீனிங்கில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியையும் இருவரும் ஒன்றாக சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு சென்று பார்த்துள்ளதாக புகைப்படம் ஒன்று தற்போது தீயாக பரவி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அடுத்ததாக, ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகி உள்ள 'இனிமேல்' ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ்: மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தியுடன் இணைந்து கைதி படத்தை விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதைப் பார்த்த நடிகர் விஜய் அடுத்து தனது மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு வழங்கினார். மாஸ்டர் படத்தை முடித்த பின்னர் தனது குருநாதரான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் இண்டஸ்ட்ரி ஹிட் படத்தைக் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். மேலும், அந்த படத்தின் மூலம் எல்சியூ என சொல்லப்படும் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸையும் உருவாக்கி லியோ படத்தையும் அதற்குள் கொண்டு வந்தார்.
கடுமையான விமர்சனங்கள்: கடந்த ஆண்டு தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக 600 கோடி ரூபாய் கலெக்ட் செய்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அடியை வாங்கியது. அதிலும் குறிப்பாக லியோவின் பிளாஷ்பேக் போர்ஷன் ரொம்பவே சொதப்பலாக உருவாக்கப்பட்டதாக நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வரை விமர்சித்திருந்தார். அவரது போன் காலை கூட சரியாக பேசாமல் லோகேஷ் கனகராஜ் தவிர்த்து விட்டதாக கூறி பகீர் கிளப்பி இருந்தார்.

தலைவர் 171: லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார். வேட்டையன் படத்தை முடித்துவிட்டு விரைவில் நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 171வது படத்தில் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கான கதை வேலைகள் நடைபெற்று வருவதாக கூறிவந்த லோகேஷ் கனகராஜ் திடீரென நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருப்பது ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
ஓவர் ரொமான்ஸ்: லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு சரியாக ரொமான்ஸ் காட்சிகளை வைக்க தெரியாது எனக் கூறிவந்த நிலையில், ஸ்ருதிஹாசனை கட்டிப் புரண்டு சோபாவில் அவர் மீது ஏறி உருளும் காட்சிகள் என ஓவர் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். அதன் டீசர் வெளியானதில் இருந்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. வரும் மார்ச் 25-ஆம் தேதி முழு பாடல் வெளியாக காத்திருக்கிறது.

சேப்பாக்கத்தில் ஜோடியாக: நேற்று தொடங்கிய ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சதீஷ், நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி, கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பார்த்தனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை லோகேஷ் கனகராஜ் நடிகர் ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து வந்து பார்த்த படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

புரமோஷனுக்காக: 'இனிமேல்' பாடல் புரமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். வரும் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ள முழு பாடலில் இன்னும் என்னவெல்லாம் சர்ப்ரைஸ் காத்திருக்குமோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











