Leo box office: விஜய்யின் லியோ முதல் வார வசூல்.. தமிழ் சினிமாவின் ரெக்கார்டு பிரேக்கா?

சென்னை: லியோ படத்தை பார்க்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் காட்டிய ஆர்வம் தொடர்ந்து முதல் வாரத்தில் லியோ திரைப்படம் இமாலய சாதனையை அடைந்துள்ளது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தில், , த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் மற்றும் மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Lokesh kanagaraj and Thalapathy vijays Leo Movie first week box office collection

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நா ரெடி தான் வரவா பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம்போட வைத்துள்ளது.

தளபதியின் லியோ: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148.5 கோடி வசூலை அள்ளியதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தாலும், படம் 1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பில்லை என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே கூறிவிட்டார். அப்போதும், படம் ஐந்தாவது நாளில் 500 கோடியை எட்டிவிடும் என்றும் 10வது நாளில் ஆயிரம் கோடியை எட்டிவிடும் என்று இணையத்தில் செய்திகள் பரவியது.

ரூ 461 கோடி வசூல்: கடந்த 19ந் தேதி வெளியான லியோ திரைப்படம் வெளியாகி ஒருவாரம் ஆனநிலையில், இப்படம் உலகளவில் 461 கோடியை வசூல் செய்து திருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் எந்த தமிழ் படமும் படைக்காத ஒரு பிரமாண்ட சாதனையை லியோ படத்தின் மூலம் நடிகர் விஜய் படைத்துள்ளார் என அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

நேற்று மந்தநிலை: லியோ முதல் வாரத்தில் இந்திய அளவில் ரூ.265 கோடியைத் தாண்டியது. அதிரடியான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான லியோ இதுவரை உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நவராத்திரி, தசரா என தொடர்விடுமுறை இருந்தால் படம் கணிசமான வசூலை பெற்று வந்த நிலையில், நேற்று அனைத்து மொழிகளிலும் படம் ₹10.25 கோடி வசூலித்தது.

தென்னிந்தி ஸ்டார்: இதன் மூலம் விஜய் தென்னிந்தியாவின் ஸ்டாராக மாறி உள்ளார். இவருடைய நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் தெலுங்கில் குறிப்பிட்ட வசூலை பெற்று வருகிறது. லியோ தெலுங்கு படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. அதே போல, கர்நாடகா, கேரளாவில் இப்படம் வசூலை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X