Leo Movie Leaked: ரசிகர்களின் ஆர்வக் கோளாறால்… இணையத்தில் லீக்கான லியோ படம்!

சென்னை: லியோ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்களின் ஆர்வக் கோளாறால் டைட்டில் கார்டு முதல் கிளைமாக்ஸ் வரை இணையத்தில் வீடியோ வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், சாண்டி,கௌதம் மேனன், அர்ஜூன் ஒரு ரசிகர் பட்டாளமே படத்தில் உள்ளனர்.

பல விதமான சர்ச்சைக்கு மத்தியில் வெளியான லியோ படம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லியோ படம் இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்தா சாதனையை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 lokesh kanagaraj and thalapathy vijays leo movie scenes leaked

தளபதியின் லியோ: ஆயுதபூயை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்டது. கேரளா மற்றும் கர்நாடகாவில் லியோ படம் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்காததால் காலை 9 மணிக்கு அனைத்து திரையரங்கிலும் சற்று முன் திரைப்படம் திரையிடப்பட்டது.

ரசிகர்கள் அலப்பறை: விஜய் படத்தை பார்க்கும் ஆசையில் கேரளா, கர்நாடகா எல்லையில் உள்ள விஜய் ரசிகர்கள் அருகிலுள்ள பக்கத்து மாநிலத்திற்கு சென்று படத்தின் அதிகாலை காட்சியை கண்டுயை பார்த்தனர். லியோ படம் திரையிடப்பட்ட தியேட்டரில் நள்ளிரவே குவிந்த ரசிகர்கள். ஆட்டம் பாட்டத்துடன் அலப்பறை செய்தனர்.

இணையத்தில் லீக்: லியோ படத்தை முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்கள் ஆர்வக் கோளாறால் டைட்டில் முதல் படத்தின் முக்கியமான சீன்களை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். ரசிகர்களின் இந்த செயல் படம் பார்க்காதவர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. லியோ படத்தின் முதல் பத்து நிமிடமும், கிளைமாக்ஸ் காட்சிதான் மாஸ் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்த நிலையில், அதையும் பேன்ஸ் வீடியோவாக வெளியிட்டு அலப்பறை செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால், படத்தின் சுவாரசியம் போய்விடும் என்று படக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X