Leo Day 6 Box Office : ஆறு நாட்களில் லியோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் ஆறாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லியோ திரைப்படம் அக்டோபர் 19ந் தேதி வியாழக்கிழமை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை விஜய் ரசிகர்கள் முண்டி அடித்துக்கொண்டு தியேட்டருக்கு படையெடுத்து பார்த்தனர்.

தளபதியை பார்த்து விட வேண்டும் என்கிற வெறியில் ரசிகர்கள் திரையிட்ட அனைத்து திரையரங்குகளையும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாற்றி அதிக வசூலை லியோ படம் அள்ளி வருகிறது.

Lokesh kanagaraj and Thalapathy vijays Leo Movie six Day Box Office Collection

தளபதியின் லியோ: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து, டிரைலரில் விஜய் பேசிய கெட்டவார்த்தை என படம் வெளியாவதற்கு முன்பே பல விதமான விமர்சனத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு சிறப்பு காட்சி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, லியோ வசூல் ரீதியாக சில சிரமங்களை சந்தித்து.

ரூ 148.5 கோடி: லியோ படத்தின் முதல் நாள் வசூல் 140 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வசூல் 148.5 கோடி என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. முதல் நாளில் சாதனை படைத்த படத்தின் வசூல் இரண்டாம் நாளில் சற்று சரிவை சந்தித்து இரண்டாம் நாளில் ரூ.65 கோடியை வசூலித்தது. படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனமே இரண்டாம் நாள் சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆறாம் நாள் வசூல்: ஆனால், அடுத்தடுத்த நாட்களில் விடுமுறை தினம் என்பதால், லியோ திரைப்படம் வசூலை அள்ளியது. 4 நாட்களில் 405 கோடி வசூல் ஈட்டிய நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் 5வது நாளில் அதிகப்படியாக 70 கோடியை வசூலித்தது. ஆறாவது நாளான நேற்று தமிழகத்தில் ரூ21.50 கோடியும், கேரளாவில் 5 கோடியும், கர்நாடகாவில் 3.50 கோடி வசூலை அள்ளி உள்ளது. மொத்தத்தில் ஆறாவது நாள் முடிவில் 35 கோடி வசூலித்து 500 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் முதல் நாள் வசூலை தவிர மற்ற நாட்களின் லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X