Leo box office: ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்குமா? தட்டித்தூக்கிய மூன்றாம் நாள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Lokesh kanagaraj and Thalapathy vijays Leo Movie Third Day Worldwide Box Office Collection

லியோ திரைப்படம் அக்டோபர் 19ந் தேதி வியாழக்கிழமை வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை விஜய் ரசிகர்கள் முண்டி அடித்துக்கொண்டு தியேட்டருக்கு படையெடுத்து பார்த்தனர்.

தளபதியை பார்த்து விட வேண்டும் என்கிற வெறியில் ரசிகர்கள் திரையிட்ட அனைத்து திரையரங்குகளையும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாற்றி அதிக வசூலை லியோ படம் அள்ளியது.

லியோ சர்ச்சை: லியோ படம் வெளியாவதற்கு முன்பே இசை வெளியீட்டு விழா ரத்து, டிரைலரில் விஜய் பேசிய கெட்டவார்த்தை என படம் பலவிதமான விமர்சனத்தை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு சிறப்பு காட்சி கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, லியோ வசூல் ரீதியாக சில சிரமங்களை சந்தித்தது.

Lokesh kanagaraj and Thalapathy vijays Leo Movie Third Day Worldwide Box Office Collection

ரூ.148.5 கோடி: இருப்பினும் முதல் நாள் வசூல் 140 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வசூல் 148.5 கோடி என தயாரிப்பு நிறுவனம் மாநில வாரியாகவும் லியோ திரைப்படம் செய்த வசூல் சாதனையை தனியாக பட்டியலிட்டு வெளியிட்டது. முதல் நாளில் சாதனை படைத்த படத்தின் வசூல் இரண்டாம் நாளில் சற்று சரிவை சந்தித்து இரண்டாம் நாளில் ரூ.65 கோடியை வசூலித்தது. படத்திற்கு எழுந்து வரும் எதிர்மறையான விமர்சனமே இரண்டாம் நாள் சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

மூன்றாம் நாள் வசூல்: இதையடுத்து, நேற்று சனிக்கிழமை என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மூன்றாம் நாள் வசூல் ரூ.21 கோடியும், கேரளா மற்றும் கர்நாடகாவில் ரூ.6 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.8 கோடியும், நார்த் இந்தியாவில் ரூ.4.50 கோடியும், இந்திய அளவில் ரூ.45.50 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் லியோ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.305 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Lokesh kanagaraj and Thalapathy vijays Leo Movie Third Day Worldwide Box Office Collection

வசூல் வேட்டை: லியோ படத்திற்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை என்பதாலும், விஜய் என்கிற மெகா ஸ்டாரின் திரைப்படம் என்பதாலும், தொடர் ஆயுதபூஜை விடுமுறை என்பதாலும் படத்தின் வசூல் இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நடிகர்கள்: விஜய் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்த படம் லியோ. இப்படத்தில் விஜய் தவிர, த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் மற்றும் மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நா ரெடி தான் வரவா பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம்போட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X