த்ரிஷா மட்டுமில்லை.. லோகேஷ், உதயநிதி ஸ்டாலின் எல்லாம் வந்து மேட்ச் பார்த்தாங்க.. மேகா ரொம்ப பாவம்!
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நேரில் கண்டு ரசித்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் சென்னை அணி கடைசி வரை போராடியும் வெற்றிப் பெறவில்லை.
சென்னை அணி தோற்றதை அறிந்து நடிகை மேகா ஆகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள்.

குந்தவையுடன் குந்தவைத்து: பொன்னியின் செல்வன் 2, லியோ என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை த்ரிஷா நேற்று நடந்த சென்னை ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார். நகைச்சுவை நடிகரில் இருந்து ஹீரோவாக அப்கிரேட் ஆகி உள்ள சதீஷ் த்ரிஷாவுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பதிவிட்டு குந்தவையுடன் குந்தவைத்து என தனது ட்விட்டர் பக்கத்தில் கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் உதயநிதி சந்திப்பு: லியோ படத்தின் ஹீரோயின் த்ரிஷா மட்டுமின்றி அந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நேற்றைய ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்தார். அவருடன் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை கண்டு ரசித்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

பிந்து மாதவி அப்செட்: கடந்த முறை சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியை சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கண்டு ரசித்த நிலையில், நேற்று நடந்த போட்டியையும் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்தனர். சென்னை அணி விக்கெட்டுகளை பறிகொடுக்கும் போதெல்லாம் நடிகை பிந்து மாதவி ரொம்பவே ஃபீல் பண்ணி அப்செட் ஆன காட்சிகள் சோஷியல் மீடியாவில் அதிகம் வலம் வருகின்றன.

மேகா ஆகாஷுக்காகவாது ஜெயிச்சிருக்கலாம்: எனை நோக்கிப் பாயும் தோட்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மேகா ஆகாஷும் நேற்றைய போட்டியை நேரில் கண்டு ரசித்தார். அந்த கடைசி பந்தில் தோனி சிக்ஸர் விளாசி சென்னை அணியை வெற்றி பெறச் செய்வார் என எதிர்பார்த்த நடிகை தோனி சிங்கிள் அடிக்க சென்னை அணி தோல்வியை தழுவியதும் ரொம்பவே கடுப்பாகி அழவே ஆரம்பித்து விட்டார். அவருக்காகவாது சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று ஜெயித்து இருக்கலாம் என ரசிகர்கள் மீம் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











