வித்தியாசமான கதைக்களம்.. விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ்.. பரபர தகவல்!

சென்னை: வித்தியாசமான கதையில் விஜய் சேதுபதியும் லோகேஷ் கனகராஜும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக மாஸ் நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஜய்யை இயக்கினார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்தது. ரசிகர்கள் மத்தியிலும் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தாமதமாகும் படப்பிடிப்பு

தாமதமாகும் படப்பிடிப்பு

தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். ஆனால் கமல் காலில் செய்திருக்கும் ஆபரேஷன் மற்றும் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட காரணங்களால் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது.

முன்பே நல்ல ரிலேஷன்ஷிப்

முன்பே நல்ல ரிலேஷன்ஷிப்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், அடுத்து ஒரு வித்தியாசமான கதையில் விஜய் சேதுபதியை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கும் லோகேஷ் கனகராஜூக்கும் இடையே மாஸ்டர் படத்திற்கு முன்பே நல்ல ரிலேஷன்ஷிப் இருந்து வருகிறது.

புதிய தகவல்..

புதிய தகவல்..

இதனால்தான் இயக்குநர் கேட்கும் முன்பே மாஸ்டர் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி. இந்நிலையில் இருவர் குறித்தும் ஒரு புதிய தகவல் கோலிவுட்டில் வலம் வருகிறது.

மீண்டும் இணையும் கூட்டணி

மீண்டும் இணையும் கூட்டணி

அதாவது ஒரு சுவாரசியமான கதைக்களத்தில் விஜய் சேதுபதியும் லோகேஷ் கனகராஜூம் விரைவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு லோ பட்ஜெட் படமாக இருக்கும் என்றும், குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் படம் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் வெளியாகும்

விரைவில் வெளியாகும்

மேலும் இந்தப் படம் விஜய் சேதுபதியின் கிளாசிக் நடிப்பால் நிறைந்திருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை யார் தயாரிக்க உள்ளார்கள் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறுப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X