Leo box office: ஜெயிலரை முந்தியதா.. லியோ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: லியோ படம் வெளியாகி மூன்றாவது வாரத்தை எட்டி உள்ள நிலையில், 18வது நாள் முடிவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், மிஷ்கின், ஆக்ஷன் கிங் அர்ஜூன், சாண்டி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களை உள்ளடக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூன் LCU-ன் உருவாகி உள்ளது. இப்படத்தை லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்யின் லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. விஜய் ரசிகர்கள் லியோ திரைப்படத்தை தீபாவளி, பொங்கல் பாண்டிகை போல கொண்டாடினார்கள். தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகாவிலும் லியோ படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. லியோ படத்தின் வசூல் விஜய்யின் முந்தைய படங்களை விட மிக சிறப்பாக உள்ளது.
மொத்த வசூல்: இந்நிலையில் திரைப்படங்களின் வசூலைக் கண்காணிக்கும் இணையதளமான sacnilk 18ஆம் நாள் முடிவில் ரூ.592 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், படத்தின் வசூல் சற்று அதிகமாகவே இருந்தது. இதனால், படம் விரைவில் ரூ.600 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த வசூல்: இந்நிலையில் திரைப்படங்களின் வசூலைக் கண்காணிக்கும் இணையதளமான sacnilk 18ஆம் நாள் முடிவில் ரூ 592 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், படத்தின் வசூல் சற்று அதிகமாகவே இருந்தது. இதனால், படம் விரைவில் ரூ 600 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பேச்சு: இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் பேசிய விஜய், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என் மீது இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க. என் உடம்பு தோலை உங்க காலுக்கு செருப்பா தச்சுப்போட்டாகூட, அந்த அன்புக்கு ஈடாகாது. உங்க உழைப்புல நீங்க எனக்காக செலவு பண்ற ஒவ்வொரு காசுக்கும் உண்மையா இருப்பேன். கொஞ்ச நாளாவே சமூக வலைதளங்கள்ல உங்க கோபம் அதிகமா இருக்கு, யார் மனசையும் யாரும் புண்படுத்த வேண்டாம் என்றார்.


Click it and Unblock the Notifications











