லியோ டிரைலரில் இருந்த கெட்டவார்த்தை மியூட்.. பணிந்ததா? பயந்ததா? படக்குழு!
சென்னை: லியோ படத்தின் டிரைலரில் இருந்து விஜய் பேசிய கெட்ட வார்த்தை காட்சி நீக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துத்துள்ள லியோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பான் இந்திய திரைப்படமாக இப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

தளபதியின் லியோ: தளபதி விஜய் டவுள் ஆக்ஷனில் நடித்துள்ள இப்படத்தில், த்ரிஷா, மன்சூர் அலிகான்,மிஷ்கின், அர்ஜு ர் ன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
சர்ச்சையான டிரைலர்: கடந்த 5ந் தேதி லியோ படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அதில், விஜய் பேசியிருந்த வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.விஜய்க்கு பெண் ரசிகைகளும், குழந்தை ரசிகர்கள் அதிகம் இருக்கும் போது இது போன்ற வசனத்தை அவர் பேசலமா? என பலரும் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர்.
விளக்கம் கொடுத்த லோகி: இந்த கெட்டவார்த்தை சர்ச்சை இணையத்தில் பேசுபொருளானதை அடுத்து, அதற்கு பதில் சொன்ன லோகேஷ் அந்த வசனத்தை பேச சொன்னது நான்தான். இதற்கும், விஜய் அண்ணாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை நான் சொன்ன போது இந்த வசனத்தை நான் பேசலாமா என தயக்கத்துடன் கேட்டார். அது கோபத்தில் வரும் வார்த்தை தான் என்று அவரை சம்மதிக்க வைத்தேன் என்றார்.
பணிந்தது படக்குழு: லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்த போதும் தொடர்ந்து சர்ச்சையும், இது குறித்த விவாதமும் தொடர்ந்ததால், வேறுவழியில்லாமல் படக்குழு பணிந்து லியோ படத்தின் டிரைலரில் இருந்து கெட்ட வார்த்தை மியூட் செய்துள்ளது. மியூட் செய்யப்பட்ட புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இன்னும் சிலர் இது தேவையில்லாத சர்ச்சை இந்த நடவடிக்கையை முன்னதாகவே எடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











