ஹாய் டியர்...சொல்லுமச்சி...நெல்சன் திலீப்குமாரிடம் லோகேஷ் கனகராஜ் கேட்ட சுவாரஸ்ய தகவல்...
சென்னை : டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் பீஸ்ட். இந்தப் படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர்.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு பிறகு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் குறிப்பாக விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

நெல்சன் இயக்கம்
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். சமூக வலைதளங்களில் பீஸ்ட் படத்தை ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர்.

பட்டையை கிளப்பும் பாடல்
விஜய்யின் பிறந்தநாளையொட்டி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து 100 நாட்கள் சூட்டிங்கை நிறைவு செய்த படத்தின் போஸ்டரை நெல்சன் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். இதனிடையே கடந்த மாதம் காதலர் தினத்தையொட்டி படத்தின் முதல் பாடல் வெளியானது.

17 கோடி வியூஸ்
இந்தப் பாடல் தற்போது 17 கோடி வியூசை எட்டியுள்ளது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் இந்தப் பாடலை மிகவும் விரும்பி வருகின்றனர். இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமந்தா, ராஷ்மிகா உள்ளிட்டவர்களும் இதற்கு விதிவிலக்கில்லை.

கோடைக் கொண்டாட்டம்
படம் கோடைக் கொண்டாட்டமாக அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தொடர்ந்து அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்ததாக படத்தின் அடுத்த பாடல் வெளியாகுமா அல்லது ட்ரெயிலர் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

லோகேஷுக்கு நெல்சன் வாழ்த்து
இதனிடையே, நேற்றைய தினம் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள். இதையொட்டி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. அவருக்கு நெல்சன் திலீப்குமாரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பீஸ்ட் அப்டேட் கேட்ட லோகேஷ்
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜும் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் பீஸ்ட் அப்டேட் குறித்தும் அவர் இந்தப் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்மூலம் பீஸ்ட் படத்தின் அப்டேட் குறித்து அனைத்து தரப்பினரும் ஆவலுடன் உள்ளது தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











