ஒரே அடியா தள்ளிப் போன மாஸ்டர் ரிலீஸ்.. ரஜினி படத்துக்கு கதை எழுத தயாரான லோகேஷ் கனகராஜ்?
சென்னை: இந்த குவராண்டின் காலத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்த லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் ஒரே அடியாக தீபாவளிக்கு தள்ளிப் போயுள்ளதாக தெரிகிறது.
கொரோனா கலவரம் இல்லாமல் இருந்திருந்தால் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே திட்டமிட்டபடி மாஸ்டர் திரைக்கு வந்திருக்கும்.

புது அனுபவம்
மாநகரம், கைதி படங்களை இயக்கியதற்கும் மாஸ்டர் படத்தை இயக்கியதற்கும் நிறைய புதிய அனுபவங்களை கற்றுக் கொண்டதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருந்தார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ், இந்த கொரோனா வைரஸால் தள்ளிப் போயுள்ளதும் லோகேஷுக்கு இன்னமும் புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும்.

தீபாவளி ரிலீஸ்
தொடர்ந்து தீபாவளி ரிலீஸ் கொடுத்து வரும் தளபதி விஜய், இந்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக தனது ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தை இறக்கலாம் என நினைத்தார். ஆனால், யாரும் நினைத்துப் பார்க்காதபடி மாஸ்டர் படத்தின் ரிலீசும் இந்த ஆண்டு தீபாவளிக்குத் தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினி படம்
கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜை வைத்து அந்த படத்தை இயக்க கமல் தரப்பும் தயாராகி விட்டதாகவும் தகவல்.

கதை எழுத
லாக் டவுன் நேரத்தில் பல இயக்குநர்களும் புதிய படங்களுக்கான கதைகளை எழுதத் தொடங்கி உள்ளனர். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதும் பணியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு செம மாஸாக ஒரு கதையை எழுத உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அண்ணாத்தைக்கு அப்புறம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் அந்த படம் முடிந்த கையோடு, லோகேஷ் இயக்கத்தில் புதிய படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











