அப்போ ஆண்டவர் கொடுத்த காரு.. புதுசா சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்.. எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடிய நிலையில், கடந்த ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

தளபதி விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் திடீரென புதிதாக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை சொந்தமாக வாங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Lokesh Kanagaraj buys a New BMW 7 Series Car for a whopping price

நடிகர்களை போலவே லோகேஷ் கனகராஜும் புதிய கார்களை சேகரிக்க திட்டமிட்டு இருக்கிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

புதிய கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்: மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து அப்கிரேட் ஆகி வரும் நிலையில், தற்போது விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிதாக BMW 7 சீரிஸ் காரை வாங்கி உள்ளார். அதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

கார் விலை: கருப்பு கலரில் கம்பீரமாக பிளாக் பாந்தர் போல இருக்கும் BMW 7 சீரிஸின் விலை 1 கோடியே 70 லட்சம் மதிப்புடையது என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விலை உயர்ந்த புதிய காரை வாங்கி இருப்பது சினிமா வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Lokesh Kanagaraj buys a New BMW 7 Series Car for a whopping price

கமல் கொடுத்த கார் என்னாச்சு?: கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் வெற்றியை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு 75 லட்சம் மதிப்புள்ள லெக்சஸ் கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.

ஒரு வருஷத்துக்குள்ளே கமல் பரிசாக அளித்த காரை தொடர்ந்து இன்னொரு காரையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாங்கியதை பார்த்த ரசிகர்கள் ஹீரோக்களை போல லோகேஷ் கனகராஜும் தனது கராஜில் கார்களை வாங்கி அடுக்கப் போகிறாரா என்கிற கேள்வியும் கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளது.

போட்டியை சமாளிப்பாரா லோகேஷ்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய போட்டிகளை சந்திக்காமல் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடியது.

ஆனால், இந்த முறை தென்னிந்திய சினிமாவிலேயே சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா, ரவி தேஜா என பலரும் அக்டோபர் மாதம் படங்களை வெளியிட உள்ள நிலையில், அந்த போட்டிகளை எல்லாம் சமாளிக்கும் அளவுக்கு லியோ படத்தை இயக்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X