மாஸ்டர்கள்.. ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்த நாளை பிரபல இயக்குநர்களுடன் கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

இதுவரைக்கும் இப்படியொரு பிறந்தநாளை தன் வாழ்நாளில் கொண்டாடியதில்லை என்றும் மாஸ்டர் இயக்குநர் ட்வீட் போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் சங்கமமாகவே இந்த புகைப்படங்கள் பார்க்கப்படுகின்றன.

மாஸ்டர் இயக்குநர் பிறந்தநாள்

மாஸ்டர் இயக்குநர் பிறந்தநாள்

கடந்த மார்ச் 14ம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த லோகேஷ் கனகராஜை வாழ்த்தி ஏகப்பட்ட பிரபலங்களும், தளபதி ரசிகர்களும் ஹாஷ்டேக் எல்லாம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மாஸ்டர்களுடன் மாஸ்டர்

மாஸ்டர்களுடன் மாஸ்டர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கெளதம் மேனன், லிங்குசாமி, சசி, வசந்த பாலன் உள்ளிட்ட இயக்குநர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை லோகேஷ் கனகராஜ் கொண்டாடியுள்ளார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஷங்கருக்கு ஊட்டிவிட்டு

ஷங்கருக்கு ஊட்டிவிட்டு

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு லோகேஷ் கனகராஜ் கேக் ஊட்டிவிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மாஸ்டர்களுடன் மாஸ்டர் பட இயக்குநர் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து இப்படியொரு பாக்கியம் உங்களுக்கு கிடைத்ததே பெரிய விஷயம் என்றும் பாராட்டி வருகின்றனர்.

இதுவரைக்கும் இல்லை

இதுவரைக்கும் இல்லை

35வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இதுவரைக்கும் தன் வாழ்நாளில் இப்படியொரு பிறந்தநாளை கொண்டாடியது இல்லை என்றும் தனது ட்வீட்டில் குறிப்பிட்டு, அனைத்து சார்களுக்கும் நன்றி என்றும் கூறியுள்ள ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Recommended Video

Pugazh க்கு வெள்ளி பிள்ளையார் கொடுத்த Santhanam | Vijay Sethupathi, Lokesh
விக்ரம் எப்படி போகுது

விக்ரம் எப்படி போகுது

விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிவடைந்த ரிசல்ட் வந்த பிறகு தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X