LCUவின் அதிபதி லோகேஷ் கனகராஜுக்கு ஹேப்பி பர்த்டே.. வெறும் 38 வயசுல இத்தனை கோடி சொத்து இருக்கா?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதல் பிறந்தநாளாக அவரது ஆருயிர் நண்பரும் இயக்குநருமான ரத்னகுமார் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. அதிகபட்சமாக 600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

மேலும், டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் என தயாரிப்பு தரப்புக்கு மிகப்பெரிய லாபத்தை அந்த படம் கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது எல்சியூவுக்குள் நடிகர் விஜய்யை கொண்டு வந்த நிலையில், அடுத்தடுத்து விஜய் எல்சியூ படங்களில் இடம்பெறுவார் என ரசிகர்கள் இன்னமும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: கிணத்துக்கடவு பகுதியில் 1986ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி பிறந்த லோகேஷ் கனகராஜ் இன்று எல்சியூ எனும் சாம்ராஜ்யத்தின் மன்னனாக தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குநர் அட்லீ, நெல்சன் என விஜய் பட்டறையில் தம்பிகளாக இணைந்ததில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அதே போல அதிக சம்பளம் வாங்கும் டாப் மோஸ்ட் தமிழ் இயக்குநராகவும் மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பாலிவுட்டில் ஒரு படம் பண்றேன்னு இவர் மட்டும் சொல்லி விட்டால், வரிசை கட்டி பல மும்பை நடிகர்கள் இவர் படத்திலும் நடிக்க ரெடியாக உள்ளனர்.
வங்கி வேலை டு வாத்தி ரெய்டு: வங்கியில் சாதாரண வேலையில் இருந்து வந்த லோகேஷ் கனகராஜுக்குள் சினிமா இயக்குநராக மாற வேண்டும் என்கிற தீ பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. அவருக்கு உறுதுணையாக அவரது மனைவி நான் வேலைக்குப் போறேன். நீங்க உங்க லட்சியத்தை நோக்கிப் பயணியுங்க என ஊக்கம் கொடுக்க ஆரம்பித்தது தான் அந்த வாத்தி ரெய்டு. மாநகரம் எப்படி இருக்கு என ஒரு கைதியாக சுற்றிப் பார்த்து மாஸ்டராக மாறிய லோகேஷ் கனகராஜ் தனது மாஸ்டர் கமல்ஹாசனை வைத்தே விக்ரம் படத்தை கொடுத்து லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸையும் உருவாக்கினார். எம்சியூவுக்கு ஒரு அயன்மேன் போல எல்சியூவுக்கு தளபதி விஜய்யை வைத்து தாறுமாறாக லியோ படத்தையும் கொடுத்துள்ளார்.
தலைவர் 171: தளபதிக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்சம் என்றால் அது தலைவர் மட்டும் தானே என நினைத்து அடுத்து தலைவர் 171வது படத்தை இயக்கும் பணிகளை வேகமாக ஆரம்பித்துள்ளார். வேட்டையன் படத்தின் மூலம் ஜெயிலரை பீட் பண்ணும் அளவுக்கு கொஞ்சம் வசூல் வேட்டையாடி விட்டு லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைந்தால் பாக்ஸ் ஆபிஸ் இந்திய சினிமாவுக்கே சவால் கொடுக்கும் அளவுக்கு பந்தயம் அடிக்கும்.
சொத்து மதிப்பு: லியோ படத்துக்கு அதிகபட்சமாக 35 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கினார் லோகேஷ் கனகராஜ் என கூறப்படுகிறது. அதிக பட்சமாக அவரது சொத்து மதிப்பு 40 முதல் 50 கோடி வரை இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர். அடுத்து தலைவர் 171 படத்துக்கும் 35 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











