மாநகரம் வந்து ரசிகர்களை கைதியாக்குவதில் மாஸ்டர்.. லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள்.. லியோ அப்டேட்?

சென்னை: தமிழ் சினிமாவின் யங் பிளடி ஸ்வீட் இயக்குநராக பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 37வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் எப்படியாவது தனது சினிமா கனவை நனவாக்க வேண்டும் என போராடும் போது, நான் வேலைக்குப் போறேன் நீங்க சினிமா வாய்ப்பை தேடுங்க என தக்க நேரத்தில் அவரது மனைவி கொடுத்த ஊக்கம் தான் மாநகரம் படம் மூலம் கோலிவுட் தலைநகருக்கே தரமான ஒரு ஹிட் மெஷின் கிடைத்துள்ளது.

ஆயுதங்களை கையாள்வதில் இவரை போல மாஸ்டர் யாருமே இருக்க முடியாது என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஷாட்களை வைத்து வியக்க வைத்து வரும் லியோ இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஹேப்பி பர்த்டே மாஸ்டரே

ஹேப்பி பர்த்டே மாஸ்டரே

கோயம்பத்தூர் கிணத்துக்கடவில் 1986ம் ஆண்டு பிறந்த லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ் சினிமாவின் இணையற்ற இளம் இயக்குநர்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது வித்தியாசமான விசாலமான கழுகு பார்வையால் கார்த்தி, விஜய், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களை இயக்கி கோலிவுட்டின் புதிய மாஸ்டராக மாறி உள்ளார். ஹேப்பி பர்த்டே மாஸ்டரே!

ஹிட் மெஷின்

ஹிட் மெஷின்

சும்மா இயக்குநராகி ஒரு சில படங்கள் பண்ணிட்டு அப்படியே செட்டில் ஆகிடலாம் என்கிற குறுகிய எண்ணம் எல்லாம் இவருக்கு கிடையவே கிடையாது. அடிச்சா கில்லி போல சொல்லி அடிக்கணும் என ஒரு படத்தை கொடுத்தாலும் அது ஹிட் படமாக வேண்டும் என்கிற பக்கா ஸ்கெட்ச் உடன் படங்களை இயக்கி வரும் ஹிட் மெஷினாக மாறி உள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என எல்லாமே சூப்பர் ஹிட் முதல் இண்டஸ்ட்ரி ஹிட் வரை அடித்த படங்கள் தான்.

குரு காணிக்கை

குரு காணிக்கை

சினிமாவை தான் படித்ததே கமல்ஹாசன் சார் படங்களை பார்த்து தான் என தனது படங்களில் தொடர்ந்து உலகநாயகனின் முத்திரைகளை பதித்து வந்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாகவே கமல்ஹாசன் உடன் இணைந்து விக்ரம் படத்தை பண்ணுவார் என அவரே கற்பனையிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது குருவுக்கு பக்கா காணிக்கை கொடுத்துள்ளார்.

பல கோடி சம்பளம்

பல கோடி சம்பளம்

மாநகரம் மற்றும் கைதி படங்களில் ஒரு கோடி ரூபாய் கூட சம்பளமாக வாங்காத லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்துக்காக 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது விஜய்யை வைத்து அவர் இயக்கி வரும் லியோ படத்துக்கு அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் எனக் கூறுகின்றனர்.

ரத்னகுமார் வாழ்த்து

ரத்னகுமார் வாழ்த்து

மாநகரம் வந்து ரசிகர்களை கைதியாக்குவதில் மாஸ்டர் என லோகேஷ் கனகராஜ் உடன் விமானத்தில் வரும் புகைப்படத்தை ஷேர் செய்து ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து லியோ படத்திலும் தனது நண்பனுக்காக பணியாற்றி வருகிறார் ரத்னகுமார்.

லியோ அப்டேட் இருக்கும்

லியோ அப்டேட் இருக்கும்

சும்மாவே லியோ படத்தின் அப்டேட்களை அள்ளி கொடுத்து வரும் தயாரிப்பாளர் லலித், தனது படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் அதுவுமா சும்மா விட்டுருவாரா என்ன? தளபதி விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ அல்லது புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய சீக்கிரமே படப்பிடிப்பை முடித்து விட்டு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை ஆரம்பிக்க காத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X