சூர்யா இருக்காரு.. கன்ஃபார்ம் பண்ண லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் டிரைலரிலேயே கண்டுபிடித்த ரசிகர்கள்!

சென்னை: விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆமாம், இந்த படத்தில் சூர்யா இருக்காரு என ரகசியத்தை உடைத்து விட்டார்.

கடந்த சில நாட்களாகவே விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்தன.

சூர்யா மற்றும் கமல் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

கமல் ரசிகன்

கமல் ரசிகன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் ஒரு தீவிர கமல் ரசிகன் என்பதை தனது முதல் படத்தில் இருந்தே கூறி வருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் கமல் ரெஃபரன்ஸ் நிறையவே இருந்தது. இந்நிலையில், கமலின் எவர்க்ரீன் மூவியான விக்ரம் படத்தின் டைட்டில் உடனே கமல்ஹாசனை வைத்து புதிய தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

பிரம்மாண்ட விழா

பிரம்மாண்ட விழா

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய லோகேஷ் கனகராஜ் தற்பொது கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் அதை விட பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார். ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறப்பு விருந்தினராக சிம்பு மட்டுமே வந்திருந்தார்.

கமல் வீட்டு முன்

கமல் வீட்டு முன்

சின்ன வயசுல பல நாள் கமல் சார் வீட்டு வாசல் முன்பாக நின்றுள்ளேன். சார் வந்து கை காமிச்சுட மாட்டாரான்னு ஆனால், இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என லோகேஷ் கனகராஜ் பூரித்துப் பேசினார்.

கொரோனாவில் குணமாகி வந்த உடனே

கொரோனாவில் குணமாகி வந்த உடனே

கொரோனாவில் இருந்து குணமாகி சார் வந்த பிறகு நைட் 2 மணிக்கு ட்ரைசெப்ஸ் ஷாட் எடுக்கணும்னு சொன்னேன் உடனடியாக 5 நிமிஷத்துல 26 புஷ் அப்ஸ் செய்துட்டு வந்து நடிச்சாரு, அந்த வீடியோவை அவருக்குத் தெரியாம எடுத்து வச்சிருக்கேன். படம் வெளியான பிறகு வெளியிடுறேன்னு லோகேஷ் பேசியதும் அரங்கில் பலத்த கைதட்டல்கள் எழுந்தன.

சூர்யா சார் இருக்காரு

சூர்யா சார் இருக்காரு

கடைசியாக ஆமாம், விக்ரம் படத்தில் சூர்யா சார் இருக்காரு என்பதை லோகேஷ் கனகராஜ் கன்ஃபார்ம் செய்ததும் அதற்காகவே காத்துக் கிடந்த ரசிகர்கள் வேறலெவலில் கத்தி கூச்சலிட்டனர். ஏற்கனவே வெளியான விக்ரம் டிரைலரிலேயே அந்த ஒரு ஷாட்டில் பின்னாடி திரும்பி நிற்பது சூர்யா தான் என கண்டுபிடித்து இருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் அதை உறுதி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X