விஜய்யோட தளபதி 67 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட்.. மிரட்டலான அப்டேட்டா இருக்கே!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை சிறப்பான முறையில் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
விஜய்யின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கமலின் விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு மற்றும் வசூல் காணப்படுகிறது. இன்றைய தினம் படம் 300 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான இயக்குநர் அடையாளம்
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அவரது நான்காவது வெற்றிப்படமாக இந்தப் படம் வெளியாகியுள்ளது. குறைவான காலகட்டத்திலேயே சிறப்பான இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் லோகேஷ். இந்நிலையில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்திலும் விஜய்யுடன் இணைகிறார் லோகேஷ் கனகராஜ்.

அக்டோபரில் விஜய் படம் சூட்டிங்
இந்தப் படத்தின் அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முன்னதாக இந்தப் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் தனது பேட்டிகளில் ஏறக்குறைய உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபர் மாதத்தில் துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

100% லோகேஷ் படம்
தற்போது விஜய் மற்றும் தான் இருவரும் ஒருவரையொருவர் சிறப்பாக புரிந்துக் கொண்டுள்ள நிலையில், தளபதி 67 படம் 100 சதவிகிதம் தன்னுடைய படமாக வெளியாகும் என்றும் முன்னதாக பேட்டியொன்றில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்தப் படம் கேங்க்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

அடுத்தது கேங்ஸ்டர் படம்
முன்னதாக ஒரு பேட்டியில் தான் சிறப்பான ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கி வைத்துள்ளதாக கனகராஜ் தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜய்யின் படம் கேங்ஸ்டர் படமாக இருக்குமோ என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்படம் கேங்ஸ்டர் படம்தான் என்று லோகேஷ் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

கேங்ஸ்டராக விஜய்?
மாணவர்கள் இடையில் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக அவர் விஜய்யின் படத்தைதான் இயக்கவுள்ளதால், அந்தப் படம் கண்டிப்பாக கேங்ஸ்டர் படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். விஜய்யை கேங்ஸ்டராக பார்த்து அதிக நாட்கள் ஆகியுள்ளது. சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் ஒரு கேரக்டரில் ராயப்பன் என்ற கேங்ஸ்டராக அவர் நடித்திருந்தார்.
ரசிகர்கள் ஆர்வம்
அவரை முழுமையான கேங்ஸ்டர் கேரக்டரில் பார்க்க ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதிலும் லோகேஷ் கனகராஜ், இத்தகைய படங்களை இயக்குவதில் தன்னுடைய திறமையை முந்தைய படங்களிலும் காட்டியுள்ள நிலையில், அவரது முழுநீள கேங்ஸ்டர் படத்தை காண ரசிகர்கள் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











