ரஜினி ரசிகர்களுக்கு ராஜ விருந்து படைத்த லோகேஷ் கனகராஜ்.. சும்மா சொல்லக்கூடாது அந்த சீனெல்லாம் தரம்!
சென்னை: கூலி படத்தை பார்த்துவிட்டு ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜை நெட்டிசன்கள் கடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் தலைவர் ரசிகர்கள் லைஃப் டைம் செட்டில்மெண்ட் என கொண்டாடி வருகின்றனர். 75 வயதாகும் நடிகரை இந்த அளவுக்கு மாஸாகவும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலாகவும் காட்டியதே பெரிய வொர்த் வர்மா சம்பவம் தான்.
தலைவர் ரசிகர்கள் எதற்காக தியேட்டருக்கு வருகின்றனர் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டு அதற்கான காட்சிகளை ஒவ்வொரு ஃபிரேமிலும் அசத்தலாக வைத்து அப்ளாஸ் அள்ளுகிறார். முதல் பாதி முழுவதும் சாதாரண கூலியாகவும் சைமன் சொல்வதைக் கேட்டு மனசுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தனது நண்பனை கொன்றவனை கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக அத்தனையும் செய்யும் இடங்களிலும் ஸ்ருதிஹாசன் திட்டி வெளியே அனுப்பும் போது கூட செம கூலாக அதை ஹேண்டில் செய்வதும் அவன் உனக்கு வெறும் அப்பன் தான் ஆனால், எனக்கு உயிர் நண்பன் என்று சொல்லும் இடமெல்லாம் நடிகர் ரஜினிக்கு செம தீனி போட்டுள்ளார்.

45 நாட்களுக்கு மேலாக இந்த படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நைட் ஷூட் செய்திருக்கிறார் என்று லோகேஷ் சொன்னது மொத்தமும் உண்மை தான் என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. இரவு நேரக் காட்சிகளில் சரியாக லைட்டிங் செய்து ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் செய்த ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.
ஆணி அடிப்பது முதல் ஆளை எரிப்பது வரை: கூலி படத்துக்கு எதற்காக ஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்றால் படத்தில் எந்தவொரு ஆபாச காட்சிகளும் இல்லை. ஆனால், அதற்கு பதிலாக படம் முழுவதும் ஆட்களின் கைகளில் ஆணி அடிப்பது முதல் உயிருடன் மனிதர்களை எரிப்பது வரையிலான கொடூரமான காட்சிகளை லோகேஷ் கனகராஜ் எந்தவொரு பிசிறும் தட்டாமல் ஹாலிவுட் படங்கள் அளவுக்கு ரொம்பவே ரியாலிட்டியாக எடுத்திருக்கிறார். அதிலும், சார்லி கொல்லப்படும் இடமெல்லாம் கொடூரத்தின் உச்சம்.
ரஜினி ரசிகர்களுக்கு ராஜ விருந்து: ஓபனிங்கில் சாதாரணமாக சூப்பர் ஸ்டாரை தேவா மேன்சன் நடத்தும் நபராக அறிமுகப்படுத்தினாலும், அந்த சிக்கிடு வைப் பாடலில் அவ்வளவு அழகாகவும் சூப்பராக ஆடவும் வைத்திருக்கிறார். சாண்டி மாஸ்டருக்கு நிச்சயம் ரசிகர்கள் ஸ்பெஷல் நன்றியை சொல்லியே ஆகவேண்டும். ரஜினிகாந்தின் காமெடி மேனரிஸம், சண்டைக் காட்சிகளில் காட்டும் வெறித்தனம் என ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிய லோகேஷ் கனகராஜ் இடைவேளையில் அந்த ஃபிளாஷ்பேக் போர்ஷனுக்கான க்ளிம்ப்ஸ் மற்றும் கடைசி கிளைமேக்ஸில் ரஜினியின் டீ ஏஜிங் காட்சிகள் என ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ராஜ விருந்து படைத்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

100 தடவை பார்க்கலாம்: ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனா இடையே நடக்கும் அந்த அட்டகாசமான சண்டை, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அந்த வாட்ச் செயின் சீன், ஃபிளாஷ்பேக் டீ ஏஜிங் தாறுமாறான போர்ஷனுக்காக மட்டுமே கூலி படத்தை 100 தடவைக்கு மேல் பார்க்கலாம். தக் லைஃப் படத்தை போல எல்லாம் இந்த படத்தை லோகேஷ் சொதப்பவில்லை. ஆனால், தேவையில்லாமல் பான் இந்தியாவுக்காக செய்யப்பட்ட கேமியோ தான் ரசிகர்களை சோதித்து விட்டது. அதை மட்டும் கொஞ்சம் திருத்தியிருக்கலாம். 1000 கோடி வசூல் வரும் என்பதற்கு கியாரண்டி கொடுக்க மாட்டேன் என்றும் ஆனால், ரஜினி ரசிகர்கள் திருப்தியாக 150 ரூபாய் டிக்கெட்டுக்கு வொர்த்தான படமாக கூலி இருக்கும் என சொன்ன விஷயத்தை பூர்த்தி செய்திவிட்டார். லியோ படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷன் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தில் அதுதான் செம ஹைலைட்டாக மாறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











