கூலி படத்தில் ரஜினிக்கு என் அப்பா பேட்ஜ் நம்பர்! மறக்க முடியாத அனுபவம் பற்றி பேசிய லோகேஷ்!

"கூலி" படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடை ஏறினார். பல மேடைகளில் பேசியிருந்தாலும், இந்த மேடை சற்று நடுக்கத்தை தருவதாக கூறினார். படத்தின் அனுபவங்களை சுருக்கமாகவும், இனிமையாகவும் பகிர்ந்துகொள்ள அவர் தயாரானார்.

நடிகர் சௌபின் குறித்து பேசிய லோகேஷ், படம் வெளியான ஒரு வாரத்தில் அவர் மிகவும் பேசப்படுவார் என்றும், சென்னைக்கு ஷிப்ட் ஆகி விடுவார் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். மேலும் உபேந்திரா சார் ஒரு முக்கியமான சீனுக்கு அவரது படத்தின் புரொமோஷன் பாதியில் வந்து நடித்து கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

Lokesh Kanagaraj Rajini s Coolie Badge Number Is My Father s
Photo Credit:

ஸ்ருதிஹாசன் படக்குழுவிற்கு இரண்டு வருடங்களாக மிகப்பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி கூறினார். நாகார்ஜுனா சாருக்காக ஒரு சவாலான கதாபாத்திரத்தை உருவாக்கியது மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்தார். சிறு வயதில் நாகார்ஜுனா அவர்களின் ஹேர் ஸ்டைலை பார்த்து தான் லோகேஷ் காப்பி அடித்தாராம்.

அமீர்கானை இயக்கியது ஒரு கனவு என்றும், அது நினைவானது என்றும் பெருமிதம் கொண்டார். மேலும் ரஜினி சாருடன் பணிபுரிந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றார். இந்த இரண்டு வருடத்தில் ரஜினி சாருடன் பழகிய அனுபவம், அவரை மேலும் பொறுமையாக்க உதவியது என்று கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50வது வருட சினிமா வாழ்க்கையில், அவரின் முதல் படம் ஆகஸ்ட் 1975ல் வெளியானது. இப்போது "கூலி" திரைப்படமும் ஆகஸ்டில் வெளியாவது ஒரு அழகான தற்செயல் நிகழ்வு. தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள், 18 மாதங்களுக்கு முன்பு கதை கேட்டதாகவும், அதன் பிறகு இன்று தான் அவரை பார்ப்பதாகவும் கூறினார். அந்தளவுக்கு சுதந்திரம் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அனிருத் இந்த படத்திற்காக தூங்காமல் வேலை செய்து வருகிறார். இந்த படம் நடந்ததற்கு அனிருத்தும், கண்ணன் சாரும் தான் காரணம். அனிருத் ஒரு சகோதரர் போன்றவர் என்று புகழ்ந்தார் லோகேஷ். படத்தில் வேலை செய்த அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

லோகேஷ் தனது உதவி இயக்குநர்களை மேடைக்கு அழைத்தார். கடந்த எட்டு நாட்களாக அவர்கள் தூங்காமல் பல மொழிகளில் இந்த படத்தை கொண்டு வர உழைத்திருக்கிறார்கள். அவர்கள் மேடையை விட்டு இறங்கியதும், இன்னும் பத்து நாட்களுக்கு வேலை இருக்கிறது என்று பெருமையுடன் கூறினார்.

தொகுப்பாளர் லோகேஷிடம், சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றிய மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டார். ரஜினி சார் கூலி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது 777 அல்லது 786 என்ற பேட்ஜ் நம்பரை பயன்படுத்துவார். ஆனால் "கூலி" படத்தில் லோகேஷ் 5821 என்ற எண்ணை பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால் அது லோகேஷின் அப்பா பயன்படுத்திய பேட்ஜ் நம்பர் ஆகும்!

ஒரு நாள் ரஜினி சார், 5821 என்பது என்ன கோடா அல்லது ஏதோ ஒரு ரேண்டம் நம்பரா என்று கேட்டாராம். அதற்கு லோகேஷ், அது என் அப்பா கூலியாக இருந்தபோது பயன்படுத்திய பேட்ஜ் நம்பர் என்று கூறினார். என்னோட அப்பா கண்டக்டர் என்று நான் சொல்லணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் சார், அது ஒரு ஸ்பெஷல் மொமெண்ட் ஆக இருக்கணும்னு நெனச்சேன்!" என்று லோகேஷ் கூறினார்.

லோகேஷ் கனகராஜின் தந்தை ஒரு பஸ் கண்டக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை அவர் தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்தார். லோகேஷின் இந்த மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்தமைக்கு தொகுப்பாளர் நன்றி கூறினார்.

More from Filmibeat

Read more about: lokesh kanagaraj coolie movie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X