Lokesh Kanagaraj: ஒரே மாவு பல தோசை.. லோகேஷ் கனகராஜ் ஃபார்முலாவை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: விஜய்யின் லியோ டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் இன்ச் பை இன்ச்சாக அப்படியே விக்ரம் படத்தை போலவே லோகேஷ் கனகராஜ் உருவாக்கி உள்ளார் என கம்பேரிசன் வீடியோவை போட்டு கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

கைதி படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் படங்களை அவர் இயக்கவில்லை என்றும் ஸ்டன்ட் மாஸ்டர் தான் இயக்கி வருகிறார் என்றும் லியோ படம் அப்படியே ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல் தான் என்றும் கூறுகின்றனர்.

ஒரே மாவு: மேலும், இதெல்லாம் ரஜினி நடித்த பாட்ஷா கதை என்றும் டபுள் ஆக்‌ஷனாக இருந்தால் ராஜாதி ராஜா கதை என்றும் ரஜினி ரசிகர்கள் வச்சு செய்து வரும் நிலையில், மேக்கிங்கில் லோகேஷ் கனகராஜ் ஏன் ஒரே மாதிரியான ஃபார்முலாவை கையாள்கிறார் என்றும் ஒரே மாவை வைத்துக் கொண்டு பல தோசைகளை சுட்டு முன்னணி இயக்குநராக வலம் வருகிறாரே என்றும் விளாசி வருகின்றனர்.

Lokesh Kanagaraj copied Vikram scenes for Leo troll goes trending

அட்லீ, நெல்சன், லோகேஷ்: தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்கள் மற்றும் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இயக்குநர்களாக ஜொலிக்கும் அட்லீ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் என மூவர் மீதும் அதிகப்படியான காப்பி கேட் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

படத்தின் கதையில் இருந்து தொடங்கி ஒரு காட்சியை கூட சொந்தமாக யோசிக்காமல் ஒவ்வொரு சர்வதேச படங்களில் இருந்தும் எடுத்து அப்படியே நம்ம ஊர் நடிகர்களை நடிக்க வைத்து வருகின்றனர் என்கின்றனர்.

Lokesh Kanagaraj copied Vikram scenes for Leo troll goes trending

புல்லட் டிரெய்ன் சீன்: லியோ டிரெய்லர் கடைசியில் விஜய் வித்தியாசமாக ரிவால்வரை கையால் தேய்த்து சுடும் காட்சி அப்படியே ஹாலிவுட் படமான புல்லட் டிரெய்ன் படத்தில் இருந்து அப்பட்டமாக சுடப்பட்டது என நெட்டிசன்கள் ஆதாரத்துடன் ட்ரோல் செய்து வருகின்றனர்.

விக்ரம் மாதிரியே இருக்கு: அர்ஜுனின் ஹரோல்ட் தாஸ் க்ளிம்ஸ் வெளியான போதே அப்படியே ரோலக்ஸ் போலவே இருக்கு என கம்பேரிசன் செய்த நெட்டிசன்கள் தற்போது லியோ டிரெய்லரையும் விக்ரம் பட டிரெய்லரையும் வைத்து கம்பேரிசன் வீடியோ போட்டுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் ஸ்டைலே இதுதானா என்றும் இதை விட்டால் வேறு ஏதும் தெரியாதா? என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X