Suriya's Rolex: சூர்யாவுக்காக ரோலக்ஸ் ஸ்க்ரிப்ட்... லோகேஷின் சர்ப்ரைஸ் மூவ்... LCU ஃபயர் ஆரம்பம்!
சென்னை: சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா, வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார்.
முன்னதாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்து மிரட்டியிருந்தார். இந்த கேரக்டரை பின்னணியாக வைத்து சூர்யா நடிப்பில் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோலக்ஸ் ஸ்க்ரிப்ட்டில் சூர்யா: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டதால், வாடிவாசல் தாமதமாகும் என சொல்லப்படுகிறது.
இதனால் மீண்டும் சூரரைப் போற்று கூட்டணியுடன் இணைய முடிவெடுத்துவிட்டாராம் சூர்யா. அதன்படி சுதா கொங்கரா இயக்கவுள்ள 'சூர்யா 43' படத்தில் துல்கர் சல்மானும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இது ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. சூர்யா 43 குறித்த அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்தப் படத்தில் மேலும் பல நடிகர்களும் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சூர்யாவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளாராம். விக்ரம் படத்திற்குப் பின்னர் சூர்யாவை ரோலக்ஸாகவே பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். அதனால், ரோலக்ஸ் கேரக்டரை ஹீரோ ரோலில் வைத்து ஒரு கதையை சூர்யாவிடம் கூறியுள்ளார் லோகேஷ்.
இந்த ஸ்க்ரிப்ட் சூர்யாவுக்கும் பிடித்துவிட விரைவில் இணையலாம் என லோகேஷுக்கு ஓக்கே கூறியுள்ளார். லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளாராம். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் கைதி 2ம் பாகத்தை இயக்கவிருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ள லோகேஷ், தற்போது சூர்யாவுக்கும் கதை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதி 2 படத்திலும் கார்த்தியுடன் சூர்யா நடிக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்த அப்டேட்டுக்கே ரசிகர்கள் வைப் ஆகியிருந்த நிலையில், தற்போது தனியாக ரோலக்ஸ் கேரக்டரையும் ஒரு படமாக இயக்கவுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. முக்கியமாக லோகேஷின் ரோலக்ஸ் ப்ராஜக்ட் குறித்து சூர்யாவே அவரது ரசிகர்களிடம் கூறியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











