Naa Ready - நா ரெடி பாடலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. மாற்றத்திற்கு ரெடியான விஜய் - லோகேஷ் கனகராஜ்?
சென்னை: Naa Ready (நா ரெடி) நா ரெடி பாடலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வரும் சூழலில் விஜய்யும், லோகேஷ் கனகராஜும் ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ்ம் சாண்டி மாஸ்டர், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
கட்டாய வெற்றி: நெல்சன் இயக்கத்தில் நடித்த பீஸ்ட், வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களின் ரிசல்ட்டும் விஜய்க்கு பெரிய அப்செட்டை கொடுத்திருக்கின்றன. எனவே இந்தப் படம் மூலம் வெற்றியை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர். மாஸ்டர் படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றி கொடுத்தல் லோகேஷ் இந்த முறை விஜய்யுடன் கை கோரித்திருப்பதால் கட்டாயம் வெற்றி உறுதி என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது திருப்பதியில் நடந்துவருகிறது. அனேகமாக இதுதான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்காக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும், நா ரெடி என்று தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் அன்றைய தினம் படக்குழு வெளியிட்டது. அவை இரண்டும் பெரும் ட்ரெண்டாகின.
பிரச்னை: பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் அனிருத், அசல் கோளாறு உள்ளிட்டோரும் பாடியிர்க்கின்றனர். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் பாடலை எழுதியிருக்கிறார். சுமார் 2000 பேருடன் விஜய் நடனம் ஆடும்படி பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபி செய்திருக்கிறார். இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் பாடலுக்கு பிரச்னை எழுதிருப்பதுதான் இப்போது முதல் விஷயமாக இருக்கிறது.
என்ன பிரச்னை: பாடல் வரிகள் முழுக்க போதை, அடிதடியை மையப்படுத்தியே இருக்கிறது. அதேபோல் விஜய்யோ வாயில் சிகரெட்டுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். விஜய் போன்ற பெரிய ஸ்டார் வேல்யூ இருக்கும் நடிகர் சமூக பொறுப்பு இல்லாமல் இப்படி இருக்கலாமா என விளாசிவருகின்றனர். மேலும் பாடலுக்கு எதிராக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நா ரெடி பாடல் லியோ படக்குழுவுக்கு புதிய தலைவலியாக வந்திருக்கிறது.
புதிய முடிவு: இந்நிலையில் இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு விஜய்யும், லோகேஷ் கனகராஜும் புதிய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, பாடல் காட்சியில் விஜய் சிகரெட் அடிக்கும் காட்சி, மது தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே படத்தின் வசனகர்த்தா ரத்னகுமார் படம் குறித்து, "விஜய் அப்பாவி குடும்ப தலைவனாகவும், கேங்ஸ்டராகவும் நடித்திருக்கிறார்" என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











