கூலி படம் கொடுத்த ஒற்றை தோல்வி.. மொத்தமாக மாறிய லோகேஷ் கனகராஜ்.. லோகி உஷாராயிட்டாரு
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் ரஜினியை வைத்து இயக்கிய கூலியும், விஜய்யை வைத்து இயக்கிய லியோவும்தான் படுதோல்வியை கொடுத்தன. இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். மேலும் டிசி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் என வரிசையாக நான்கு படங்களை சூப்பர் டூப்பர் ஹிட்டாக கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் வரைக்குமே அவரது மேக்கிங்கில் ஏதோ ஒரு புதுமை இருந்தது. மேலும் எல்சியூ, ரெட்ரோ பாடல்கள் என சில விஷயங்கள் அவரது படங்களை கரை சேர்த்தன. ஆனால் அதே ஃபார்முலாவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவது ரசிகர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை கொடுத்தது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடு லியோ, கூலி ஆகிய படங்களில் ரொம்பவே வெளியானது.

என்ன பிரச்னை?: லோகேஷ் கனகராஜின் முதல் மைனஸாக பார்க்கப்படுவதே அவரது கதைக்களங்கள்தான். ஏதோ ஒரு கடத்தலையோ அல்லது அதீத வயலன்ஸையோ மையப்படுத்திதான் அவரது திரைக்கதை அமைந்திருக்கும். அது லியோவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதுவும் அதன் பிளாஷ்பேக் போர்ஷன், நரபலி விஷயம் எல்லாம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி படத்துக்கு சறுக்கலை கொடுத்தன. லியோவில் விட்டதை கூலியில் சரி செய்துவிடுவார் என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள்.
கூலியிலும் அடி: ஆனால் கூலியும் வழக்கமான லோகேஷ் ஃபார்முலாவில் வர; ரசிகர்கள் கொந்தளிப்பின் உச்சத்துக்கே சென்று படத்தை படுதோல்வியடைய செய்தார்கள். ரஜினி 74 வயதிலும் போட்ட முழு உழைப்பும் வீணாகிப்போனது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை அந்தப் படம் அள்ளிவிடும் என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். ஆனால் அதன் உண்மையான வசூல் போட்ட பட்ஜெட்டைகூட எடுக்கவில்லை என்பதுதான் ஒருதரப்பினரின் ஆணித்தரமான கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படங்கள்: லியோ, கூலி கொடுத்த தோல்வி கண்டிப்பாக லோகேஷின் அடுத்தடுத்த படங்களில் பாடம் கற்றுக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் நண்பரும், இயக்குநருமான ரத்னகுமார் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ரத்னகுமார் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "29 படம் பற்றி பேசும்போது லோகேஷ் கனகராஜ் என்னிடம், 'இனி நான் பேட்டி கொடுக்கப்போவதில்லை' என கூறினார். டிசி படத்துக்கும் அவர் பேட்டி கொடுக்கப்போவதில்லை. அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப்போகும் படத்துக்கும் அவர் கொடுக்கப்போவதில்லை. அந்த மைண்ட்செட்டில்தான் இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். ஏன் பேட்டி கொடுக்கமாட்டார் என்பது குறித்து அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். இருந்தாலும் நீங்கள் எல்லாம் சும்மா விடமாட்டீர்கள். அவரை எப்படியாவது வரவழைத்துவிடுவீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
