Lokesh Kanagaraj: "சின்மயி சொன்னது பொய்... லோகேஷ் கனகராஜ் பண்ணது தப்பு” கிளம்பியது அடுத்த சர்ச்சை!
சென்னை: லியோ படத்தில் த்ரிஷாவுக்கு டப்பிங் பேசிய விவகாரத்தில் லோகேஷ் கனகராஜ், சின்மயி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி டப்பிங் யூனியன் ராஜேந்திரன் பேசிய வீடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்மயி சொன்ன ஒரு பொய்யால் டப்பிங் யூனியனுக்கு பல லட்சங்கள் வீண் செலவு எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் சொன்னது ரொம்ப தப்பு
விஜய்யின் லியோ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ விமர்சன ரீதியாக வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு சின்மயி டப்பிங் கொடுத்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதில் லோகேஷ் கனகராஜ் மீதும் தவறு உள்ளதாக டப்பிங் யூனியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டப்பிங் யூனியனில் சின்மயி சாதாரண உறுப்பினராக தான் சேர்ந்தாராம். அதனால் அவரது சந்தாவை புதுப்பிக்க சொன்ன போது, தான் லைஃப் டைம் மெம்பர், எனவே சந்தாவை புதுப்பிக்க தேவையில்லை எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றம் செல்ல, சங்க நடவடிக்கையே சரி என நீதிபதியும் தீர்ப்பளித்துள்ளார். சின்மயி சொன்ன இந்த பொய்யால் டப்பிங் யூனியனுக்கு சில லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனால் அவர் டப்பிங் கொடுக்கக் கூடாது என யூனியன் தடை விதித்துள்ளது.
ஆனால், அதனையும் மீறி லோகேஷ் கனகராஜ் லியோவில் சின்மயியை டப்பிங் கொடுக்க அழைத்துள்ளார். அப்போது சின்மயிடம் "யூனியன் கீனியனு அதெல்லாம் விடுங்க, நீங்க பேசுங்க, பார்த்துக்கலாம்" என லோகேஷ் கனகராஜ் கூறியதாக தெரிகிறது. இதனையும் டப்பிங் யூனியன் ராஜேந்திரன் தவறு என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு சின்மயி மீண்டும் உறுப்பினராக சேர்ந்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார் அவர்.
வைரமுத்து மீது மீ-டூ புகார் தெரிவித்து அதிர வைத்தவர் சின்மயி. தற்போது டப்பிங் பேசியதில் சர்ச்சையில் சிக்கியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் லோகேஷ் கனகராஜ்ஜும் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











