கைதி படத்துல செத்த அர்ஜுன் தாஸ் விக்ரம் படத்துல எப்படி? லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலெக்ஸ் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் போது கைதி படத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட அன்பு (அர்ஜுன் தாஸ்) உயிரோடு இருப்பதை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்களுக்கு ஒரே ஷாக்.
இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு நேற்று ட்விட்டரில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்த போது, ரசிகர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டு அவரை மடக்க நினைத்தார்.
ஆனால், தனது ஸ்க்ரிப்ட்டில் தெளிவாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அந்த ரசிகருக்கு அளித்த பதில் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

கைதி தரமான சம்பவம்
இளம் நடிகர்களை வைத்துக் கொண்டு மாநகரம் எனும் தரமான படத்தைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி எனும் தரமான சம்பவத்தை செய்து இந்தியளவில் பேசப்பட்டார். டில்லி கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தி ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருப்பார்.

டில்லிக்கு வில்லன்
மறைந்த நடிகர் ரகுவரனுக்கு பிறகு வித்தியாசமான குரல் வளம் கொண்டு கைதி படத்தில் வில்லன் அன்புவாக மிரட்டி இருப்பார் நடிகர் அர்ஜுன் தாஸ். காவல் நிலையத்தில் புகுந்து அண்ணன் அடைக்கலத்தை காப்பாற்ற வரும் அன்புவை அங்கிருக்கும் கல்லூரி மாணவர்களை கொண்டு நெப்போலியன் கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியன் போட்டுத் தள்ளுவது போல காட்சி இடம்பெற்றிருக்கும்.

விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸ்
கைதி படத்தில் உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட அர்ஜுன் தாஸ் விக்ரம் படத்தில் கடைசியாக கிளைமேக்ஸில் சூர்யா ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் வரும் போது அங்கே இடம்பெற்றிருப்பார். கைதி படத்தில் இறந்த அன்பு எப்படி விக்ரம் படத்தில் உயிரோடு வந்தார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அதே கேள்வியை ரசிகர் ஒருவர் நேற்று நடைபெற்ற #AskDirLokesh கேள்வி பதிலில் ரசிகர் ஒருவர் எழுப்பினார்.
Recommended Video

சாகவில்லை
நெப்போலியன் எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியம் fire extinguisher ஆல் அர்ஜுன் தாஸை அடித்து வீழ்த்துவது போல அந்த காட்சி அமைந்திருக்கும். ஆனால், அவர் சாகவில்லை என்றும், அவரது கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்ததையும் விக்ரம் படத்தில் தெளிவாக காட்டி இருக்கிறேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

கைதி 2
மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் விஜய்சேதுபதிக்கு அடியாளாக நடித்து இருப்பார். கிளைமேக்ஸில் விஜய் அவரையும் திருத்தி வழியனுப்பி வைப்பார். ஆனால், அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் எப்படி தப்பித்தார் என்று கைதி 2 படத்தில் விவரமாக கூறவுள்ளேன் என்றும் அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.


Click it and Unblock the Notifications











