Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச வீடியோக்கள்?.. உண்மை என்ன?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து தலைவர் 171வது படத்தை இயக்க உள்ள நிலையில், அதற்கான எழுத்து பணிகளில் பிசியாக உள்ளார். இந்த வாரம் அவரது தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் உறியடி விஜய்குமார் நடித்துள்ள ஃபைட் கிளப் படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் பேஸ்ஃபுக் பக்கத்தை விஷமிகள் ஹேக் செய்து பிட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ஆனால், அது தனது அக்கவுண்டே இல்லை என்று லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

Lokesh Kanagaraj explains he is not in Facebook and its a fake page

ஹேக் செய்யப்பட்டதா?: லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். இந்த ஆண்டு அதையும் மிஞ்சும் அளவுக்கு தளபதி விஜயை வைத்து அவர் இயக்கிய லியோ திரைப்படம் 600 கோடி வசூலை ஈட்டியது. அடுத்ததாக அடுத்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 161 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயற்கை உள்ளார். இந்நிலையில், அவரது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆபாச வீடியோக்கள்: மேலும், லோகேஷ் கனகராஜ் பெயரில் உள்ள ஃபேஸ்புக் பக்கத்தில் வைரல் யோகா எனும் ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் ஏகப்பட்ட பேர் அதை ஷேர் செய்து ட்ரோல் செய்து வந்தனர்.

Lokesh Kanagaraj explains he is not in Facebook and its a fake page

லியோ முழு படம்: சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முழுவதையும் அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் விஷமிகள் பதிவேற்றம் செய்த நிலையில், தற்போது ஆபாச யோகா வீடியோக்கள் அந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிர் கிளப்பியுள்ளன. தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜை யாரோ திட்டமிட்டு டார்கெட் செய்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது என் கணக்கே இல்லை: இந்நிலையில், செய்திகளில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், லோகேஷ் கனகராஜ் காதுகளுக்கு சென்ற நொடியில், தான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருப்பதாகவும் ஃபேஸ்புக்கில் தனக்கு கணக்கே இல்லை என்றும் அந்த ஃபேக்கான பக்கத்தை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X