twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த பாகத்தில் சந்திக்கும் டில்லி - ரோலக்ஸ்.. எப்படி இருக்கும்? ஹிண்ட் கொடுத்த லோகேஷ்!

    |

    சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தில் கைதி படத்தின் கேரக்டர் சேர்க்கப்பட்டிருந்தது.

    சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் மட்டுமின்றி கைதியின் டில்லி கதாபாத்திரமும் அடுத்த பாகத்திற்கான லீட் காட்சிகளாக காட்டப்பட்டிருந்தன.

    சூர்யா மிரட்டலான காட்சிகளில் நடித்திருந்த நிலையில், கார்த்தியின் கேரக்டரான டில்லியின் வாய்ஸ் மட்டுமே படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

    மதுரையை மையமாக வைத்து கமல்ஹாசனுக்கு கதை எழுதியுள்ள பா.ரஞ்சித்... தரமான சம்பவம் காத்திருக்கு!மதுரையை மையமாக வைத்து கமல்ஹாசனுக்கு கதை எழுதியுள்ள பா.ரஞ்சித்... தரமான சம்பவம் காத்திருக்கு!

    விக்ரம் படம்

    விக்ரம் படம்

    நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா என மல்டி ஹீரோக்களின் சங்கமமாக காணப்படுகிறது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான விக்ரம் படம். அனைத்து ஹீரோக்களுக்கும் ஒரு மாஸ் தமிழ் சினிமாவில் உள்ள நிலையில், இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் பயன்படுத்தும் தைரியம் லோகேஷுக்கு இருந்துள்ளது.

    கார்த்தியின் கைதி படம்

    கார்த்தியின் கைதி படம்

    முன்னதாக கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தில் தன்னுடைய ஆயுள் தண்டனை முடிந்து, அனாதை இல்லத்தில் இருக்கும் தன்னுடைய மகளை பார்க்க செல்லும் அவர், வழியில் ஒரு காவல்துறை ஆபரேஷனுக்கு எப்படி துணை செய்கிறார் என்பதாக கதை எடுக்கப்பட்டிருந்தது.

    அடுத்தபாகம் குறித்த எதிர்பார்ப்பு

    அடுத்தபாகம் குறித்த எதிர்பார்ப்பு

    குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தப் படம் மிரட்டலான திரைக்கதை, சிறப்பான காட்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு அப்போதே எழுந்தது. படத்தின் நரேனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அடுத்த பாகத்தின் லீட்

    அடுத்த பாகத்தின் லீட்

    இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள விக்ரம் படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற வகையில் பல விஷயங்களை கொடுத்துள்ளார் லோகேஷ். இந்தப் படத்தில் அடுத்த பாகத்திற்கான லீடாக சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் அமைந்தது. அவர் தனது போதைப் பொருள் குறித்த விசாரணையின்போது விக்ரம் மற்றும் டில்லி குறித்து பேசுவார்.

    Recommended Video

    Vikram பட வெற்றிக்காக நன்றி கூறி 5 மொழிகளில் பேசி வீடியோக்களை வெளியிட்டார் Kamal #Kollywood
    தளபதி 67ல் லோகேஷ் பிசி

    தளபதி 67ல் லோகேஷ் பிசி

    இந்நிலையில் விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். முன்னதாக இந்தப் படம் குறித்து பேசிய அவர் இது ஒரு கேங்ஸ்டர் படம் என்று தெரிவித்துள்ளார். படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

    விரைவில் அறிவிப்பு

    விரைவில் அறிவிப்பு

    இந்தப் படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், அதையடுத்து கைதி 2 அல்லது விக்ரம் 3 படத்தை லோகேஷ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தில் கார்த்தியின் டில்லி கேரக்டரின் வாய்ஸ் மட்டுமே பயன்படுத்தப்பட்டது குறித்து தற்போது லோகேஷ் பேசியுள்ளார்.

    டில்லியின் வாய்ஸ்

    டில்லியின் வாய்ஸ்

    விக்ரம் படத்தில் ஏற்கனவே பவர்புல்லான ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய நிலையில், ஒரே படத்தில் அனைத்தையும் கூற தான் விரும்பவில்லை என்றும் அதனால்தான் டில்லியின் மகள், உள்ளிட்ட அனைவரையும் படத்தில் பயன்படுத்திவிட்டு டில்லியின் வாய்சை மட்டுமே பயன்படுத்தியதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

    மாஸான மிரட்டலான காட்சி

    மாஸான மிரட்டலான காட்சி

    மேலும் ரோலக்சும் டில்லியும் சந்திக்கும்போது அந்த காட்சி மிரட்டலாகவும் மாஸாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் கைதி 2 படமாக அடுத்தப்படம் இருக்கும்பட்சத்தில் அதில் ரோலக்சை எப்படி கொண்டுவருவார் என்பது குறித்தும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    English summary
    Director Lokesh reveals why he is not using Karthi's Delli character in Vikram movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X