அட என்னப்பா ஆச்சு?.. லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்தில் திடீரென ஓடும் லியோ படம்.. என்ன காரணம்?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கத்தில் திடீரென லியோ படம் ஓடுவதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தளபதி விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

அப்போதே சிலர் யூடியூபில் லியோ முழு படத்தை வெளியிட்ட நிலையில், அதிரடியாக அது நீக்கப்பட்டது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் முகநூல் பக்கத்திலேயே லியோ படம் ஓடிக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வசூலில் நம்பர் ஒன்: இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை சற்றே முந்தி விஜய்யின் லியோ படம் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தை பொன்னியின் செல்வன் வசூலில் பீட் பண்ண நிலையில், இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் தமிழ் சினிமாவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஓடிடியிலும் அசத்தல்: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான லியோ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டாப் டிரெண்டிங்கில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தின் ஹெச்.டி நெட்பிளிக்ஸில் படம் வெளியாகும் முன்னதாகவே லீக் ஆனது. அதே போல யூடியூப் சேனலிலும் லியோ படத்தை திருட்டுத் தனமாக வெளியிட்டனர்.
ஃபேஸ்புக் பக்கத்தில் லியோ: இந்நிலையில், எல்லாத்தையும் தாண்டி தற்போது லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்திலேயே லியோ முழு படமும் ஓடுவது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விஷயம் லோகேஷ் கனகராஜுக்கு தெரியுமா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஹேக்கிங்: லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கத்தை விஷமிகள் ஹேக் செய்து இப்படி லியோ படத்தை போட்டுள்ளனர் என்றும் அவரது கணக்கை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் ஃபைட் கிளப் படத்தை ரிலீஸ் செய்ய உள்ள நிலையில், அடுத்ததாக தலைவர் 171 படத்தை இயக்கப் போகிறார்.


Click it and Unblock the Notifications











