twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்பவுமே போதை பொருள் வச்சி படம் பண்றீங்க. முன் அனுபவமா... லோகேஷிடம் ரசிகரின் எடக்கு மடக்கான கேள்வி!!

    |

    சென்னை: ஒரு வங்கி ஊழியராக இருந்து தற்சமயம் இந்திய அளவில் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக உருவாகி இருப்பவர்தான் லோகேஷ் கனகராஜ்.

    முதல் படத்திலிருந்து டார்க் ஜானரில் படங்கள் செய்து அதில் வெற்றியும் குவித்து வருகிறார்.

    இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் நடந்த ஒரு உரையாடலில் ஒருவர் கேட்ட கேள்விக்கு லோகேஷ் கூறிய பதிலை பார்ப்போம்.

    3 கேர்ள்ஃபிரெண்ட்.. ராயல் என்ஃபீல்ட்ல டெலிவரி பாய் வேலை.. தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்! 3 கேர்ள்ஃபிரெண்ட்.. ராயல் என்ஃபீல்ட்ல டெலிவரி பாய் வேலை.. தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

     சென்னை மாநகரம்

    சென்னை மாநகரம்

    தன்னுடைய முதல் படமான மாநகரம் படத்திலேயே யார் இந்த இயக்குநர் என்று திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் லோகேஷ். சினிமா வாய்ப்பு தேடி வங்கி வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தவருக்கு சில சிரமங்கள் நடைபெற்றிருக்கிறது. அதை மையப்படுத்தி ஒரு கதை எழுதி மாநகரம் திரைப்படத்தை உருவாக்கி இருப்பார். இப்போது அந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

     கைதி மாஸ்டர்

    கைதி மாஸ்டர்

    தனது இரண்டாவது படமான கைதியில் ஆக்‌ஷன் கதைக் களத்தை கையாண்டு அதில் பட்டையை கிளப்பி இருப்பார். கைதி கொடுத்த வெற்றியின் காரணமாகவே அவருக்கு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படமும் அவருக்கு வெற்றிப் படமாகவே அமைந்தது. குறிப்பாக விஜய் சேதுபதி நடித்திருந்த பவானி கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

     போதைப் பொருள்

    போதைப் பொருள்

    யாரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு லோகேஷ் சினிமாவிற்கு வந்தாரோ அந்த நபரான கமல் ஹாசனை வைத்தே தனது நான்காவது படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவின் பல சாதனைகளை விக்ரம் திரைப்படம் முறியடித்தது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கே லோகேஷின் படத்தில் நடிக்க விருப்பப்படுகிறேன் என்று ஒரு மேடையில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலுக்காக மக்களை லோகேஷ் சந்தித்திருக்கிறார் லோகேஷ். அதில் ஒரு நபர்,"தொடர்ந்து போதைப் பொருட்களை பற்றி படம் எடுக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் பாதிப்படைந்தார்களா, இல்லை அதனை கடந்து வந்துள்ளீர்களா, எதன் காரணமாக போதைப் பொருளின் தாக்கத்தை வைத்தே படம் எடுக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்டார்.

    Recommended Video

    LOKESH KANAKARAJ | பாராட்டுகளை தாண்டி பயம் அதிகம் ஆகிடுச்சு
     லோகேஷ் பதில்

    லோகேஷ் பதில்

    அதற்கு,"கைதி திரைப்படத்தில் டிரக்ஸ் சம்பந்தமாக சில கிரவுண்ட் வொர்க் செய்தேன். அப்போதுதான் போதைப் பொருளால் எந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எனக்கு தெரிந்தது. அந்த பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடுவதற்காகவே பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போது அந்த கதாநாயகர்கள் வழியாக அந்தக் கருத்தை தொடர்ச்சியாக என்னுடைய படங்களில் கூறுகிறேன்" என்று லோகேஷ் கூறியுள்ளார்.

    English summary
    Why you always make a film under the influence of drugs, lokesh kanagaraj fan question to him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X