Lokesh Kanagaraj: “பத்து வேண்டாம்... இந்த 5 படத்தோட நிறுத்திக்கோங்க...” லோகேஷிடம் கதறும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ, அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.
லோகேஷின் LCUன் கீழ் வெளியான லியோவுக்கு ரசிகர்களிடம் இருந்து நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

லியோ படம் பற்றி லோகேஷ் ஓவர் பில்டப் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்கின்றனர்.
இந்நிலையில், லோகேஷ் 5 படங்களுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கெஞ்சலாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
லோகேஷிடம் கெஞ்சிய ரசிகர்கள்
மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களுடன் இணைந்தார். அதன்படி கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் படங்களை கொடுத்து கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறினார்.
இதனால் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் விஜய்யுடன் அவர் இரண்டாவது முறையாக இணைந்த லியோ மீதான ஹைப் பற்றி சொல்லவே வேண்டாம். லியோ படத்தின் அப்டேட் வெளியானது முதல், விஜய் ரசிகர்கள் கை, கால்கள் பதற சுகர் மாத்திரையோடு வலம் வந்தனர். இறுதியாக கடந்த வாரம் 19ம் தேதி லியோவும் வெளியாகிவிட்டது.
லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் பான் இந்தியா படமாக வெளியான லியோ, முதல் நாளில், மட்டுமே 148 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், அதன்பின்னர் இந்தப் படம் அப்படியே படுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேக்கிங்கில் கவனம் செலுத்திய லோகேஷ் கனகராஜ், கதை, திரைக்கதையில் தனது வித்தைகளை இறக்கிவிட மறந்துவிட்டதாக விமர்சித்தினர்.

லியோ LCU-ன் கீழ் வந்திருந்தாலும், அதிலும் தரமான சம்பவங்கள் ஏதும் இல்லை என்பதே ரசிகர்களின் வருத்தமாகும். லியோவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். இதனால் விரைவில் தலைவர் 171 ஸ்க்ரிப்ட்டை பட்டை தீட்ட ரெடியாகிவிட்டாராம். முன்னதாக லியோ ப்ரொமோஷன் பேட்டிகளில் மொத்தமாகவே நான் பத்து படங்கள் மட்டுமே இயக்குவேன் எனக் கூறியிருந்தார்.
இப்போது அதையே லோகேஷுக்கு எதிரான கன்டெண்ட்டாக மாற்றியுள்ளனர் ரசிகர்கள். பத்து படங்கள் மட்டும் இயக்கிவிட்டு ரிட்டையர்டு ஆகிவிடுவேன் என சொன்ன லோகேஷ் கனகராஜ்ஜிடம், "10 படம் இயக்கிட்டு படம் டைரக்ட் பண்றது நிறுத்திருவேன் சொன்ன லோகி, நீங்க எடுத்த அஞ்சே போதும் நிறுத்திக்கிறியான்னு கேளுங்கணா" என மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். லியோ வெளியாகும் முன்னரே ஓவர் பில்டப் கொடுத்தது தான் இதற்கெல்லாம் காரணம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











