லோகேஷ்.. லோகேஷ்.. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த விக்ரம் இயக்குநர்.. ரசிகர்கள் கரகோஷம்!

சென்னை: விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த நிலையில், ரசிகர்கள் அவருக்கு கொடுத்த உற்சாக வரவேற்பு வீடியோ டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Vikram Public Review | Kamal Haasan | VijaySethupathi | Lokesh Kanagaraj | #vikramfdfs

சொல்லி அடிச்ச கில்லியாக தனது குருநாதர் கமலுக்கு சூப்பர் கம்பேக் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

முதல் பாதி முழுக்கவே அதிகமாக கமலை காட்டாமல், இடைவேளையின் போது வெறித்தனமாக அவரை அறிமுகம் செய்வதே அட்டகாசம் என ரசிகர்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உழைப்பை பார்த்து மெய் சிலிர்த்துப் போயுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். விமர்சன ரீதியாக அந்த படம் நல்ல வரவேற்பை பெற, உடனடியாக நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்தார். கைதி படம் பிகில் படத்துடன் போட்டியாக வெளியான நிலையில், கரண் ஜோஹர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களே கைதி படத்தை பாராட்டித் தள்ளினர்.

கைதி தந்த வெற்றி

கைதி தந்த வெற்றி

லாரி டிரைவர் டில்லி கதாபாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கார்த்தி. பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை என ஏகப்பட்ட புதுமைகளை புகுத்தி இருந்த நிலையில், கைதி படம் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்தது. அந்த படம் கொடுத்த வெற்றியின் காரணமாக அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது.

மாஸ்டர்

மாஸ்டர்

கமல்ஹாசனின் நம்மவர் படத்தின் இன்ஸ்பிரேஷனை கொண்டு லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை உருவாக்கினார். முதல் பாதியில் டிரங்கன் மாஸ்டராக நடித்து மிரட்டிய விஜய் இரண்டாம் பாதியில் குடியை விட்டொழித்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி மாணவர்களை சீர்ப்படுத்தும் வாத்தியாக ரெய்டு நடத்தி கொரோனா அச்சம் நீங்கி மக்களை தியேட்டருக்கு வர வழைத்தார்.

4வது படத்திலேயே

4வது படத்திலேயே

தனது மானசீக குருவான கமல்ஹாசனை 4வது படத்திலேயே இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த நிலையில், எப்படியாவது தரமான சம்பவத்தை பண்ணி விட வேண்டும் என இரவு பகல் தூங்காமல் வேலை பார்த்த லோகேஷ் கனகராஜ் ஜுன் 3 இரவு தான் நிம்மதியாக தூங்கணும் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

தியேட்டரில் லோகேஷுக்கு பாராட்டு

விக்ரம் படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்கு சென்று பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜை ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி, லோகேஷ்.. லோகேஷ்.. என கூச்சலிட்டு, விசிலடித்து கொண்டாடி தீர்த்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

தளபதி 67 எப்படி இருக்குமோ

தளபதி 67 எப்படி இருக்குமோ

விக்ரம் படமே இப்படி மிரட்டலாக எடுத்து வைத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய் உடன் இணைந்து தளபதி 67 படம் பண்ணா எப்படி இருக்கும் என விஜய் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் எழுத்தையும் இயக்கத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X