திடீர் விசிட்.. பிரபல இயக்குநருக்கு ஷாக் கொடுத்த மாஸ்டர் இயக்குநர்! எப்பவுமே அதிரடி தான் போல!

சென்னை: மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அந்த படக்குழுவினருக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, முனிஷ்காந்த், சார்லி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தை இயக்கி அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். வரும் மார்ச்சில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படம், பெரிய பட்ஜெட் ஏதும் இன்றி, சின்ன பட்ஜெட்டில், எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்தது. பின்னர், கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம், அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. மூன்றாவது படமாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

கமல் ரசிகர்

கமல் ரசிகர்

தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், தான் ஒரு தீவிர கமல் ரசிகர் என்றும், விருமாண்டி படம் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும், கமல் படங்களை பார்த்து பார்த்து தான் இயக்கத்தை கற்றுக் கொண்டேன் என்றும் பல மேடைகளில் பேசியுள்ளார்.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் திரைப்படத்திற்கு, போட்டியாக கைதி படத்தை களம் இறக்கி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில், விஜய், விஜய்சேதுபதி மற்றும் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.

திடீர் விசிட்

திடீர் விசிட்

மாஸ்டர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில், உருவாகி வரும் ஹிரிதயம் ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது என்ற தகவல் அறிந்ததும், நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்து, இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வைரலாகும் செல்ஃபி

மாஸ்டர் செல்ஃபி அண்மையில், உலகளவில் டிரெண்டிங்கான நிலையில், தற்போது மாஸ்டர் பட இயக்குநர், மலையாள படக்குழுவுடன் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தில், மோகன் லால் மகன் பிரணவ் நாயகனாகவும், கல்யாணி பிரியதர்ஷினி நாயகியாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் விஜய்யுடன்?

மீண்டும் விஜய்யுடன்?

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ள நிலையில், தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து, சுதா கொங்கரா விஜயை இயக்குவார் என்றும், இல்லை இல்லை, மீண்டும் லோகேஷ் கனகராஜ் தான் தளபதி 65 படத்தை இயக்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X