Blue Sattai Maran - போதையை ரொம்ப பயன்படுத்துகிறார் லோகேஷ் கனகராஜ்.. விஜய்க்கு கவலை இல்லை.. ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) லோகேஷ் கனகராஜ் குறித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே தனது தரமான மேக்கிங் மற்றும் கதை, திரைக்கதை மூலம் கவனம் ஈர்த்தார். அந்தப் படத்துக்கு பிறகு கைதி படத்தை இயக்கிய அவர் அந்தப் படத்தின் மூலம் ஹிட் இயக்குநர் என்ற வரிசையில் இணைந்தார். குறிப்பாக அதிலும் அவரது மேக்கிங் நன்றாகவே இருந்தது.

தொடர் ஹிட்டுகள்: முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். முதன்முறையாக விஜய்யோடு இணைந்த அவர் அதுவரை யாரும் காண்பிக்காத வகையில் விஜய்யை படு கேஷுவலாக காட்சிப்படுத்தியிருந்தார். படமும் அதிரிபுதிரி ஹிட்டடித்து நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் மேற்கொண்டு அவரது கிராஃப் உயர்ந்தது.
விக்ரம்: அதேபோல் அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக விக்ரம் படம் ரிலீஸாவதற்கு முன்பு தொடர்ந்து தமிழ் படங்கள் தோல்வியை சந்தித்துக்கொண்டிருந்தன. மாறாக புஷ்பா, கேஜிஎஃப் உள்ளிட்ட பிற மாநில படங்கள் ஹிட்டடித்தன. விக்ரம் வந்து ஹிட்டான பிறகு தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. அதிலும் லோகேஷ் கனகராஜ் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறினார். இதனால் அவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.
லியோ: அவர் இப்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படமும் ப்ளாக் பஸ்டர் ஆகும் என திரைத்துறையில் பலர் நம்புகின்றனர். இப்படி லோகேஷ் பக்கம் பலமாக சாதக காத்து அடித்தாலும் விமர்சன காற்றும் அடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
அதாவது மாநகரம் படம் மட்டும்தான் கதை ரீதியாக உருப்படியான விஷயத்தை அவர் பேசியிருந்தார். ஆனால் அதற்கு அடுத்து அவர் எடுத்த கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் போதையையும், வன்முறையையும் ரொம்பவே கதைக்குள் வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் போதை இல்லாமல் அவரால் ஒரு கதையைக்கூட யோசிகக் முடியாதா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. அதேபோல்தான் இப்போது லியோ படத்த்தின் முதல் சிங்கிளும் இருந்தது. கதையில் போதை பொருட்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் சமூகத்தின் மீது அக்கறையே இல்லாமல் முழுக்க முழுக்க போதை, வன்முறை சம்பந்தப்பட்ட படமாகவே எடுக்கிறார். இது சமூகத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் இருப்பதாக பலர் தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்நிலையில் பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் இதே கருத்தை கூறியிருக்கிறார்.
ப்ளூ சட்டை ட்வீட்: அவரது தனது எக்ஸ் தளத்தில் அர்ஜுன் லியோ படத்தில் புகை பிடிக்கும் ஃபோட்டோவுடன், "லோகேஷ் கனகராஜ் தனது திரைப்படங்களில் ட்ரக்ஸ், கஞ்சா, போதை, வன்முறை, ரத்தம், கத்திகள், துப்பாக்கிகள் ஆகியவைகளை ரொம்பவே மிகைப்படுத்தி சர்வசாதாரணமாக புழங்கும்படி வைக்கிறார். விஜய், அர்ஜுன் போன்ற நடிகர்கள் எல்லாம் அது சமூகத்திலும் இளைஞர்களிடமும் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலையே படாமல் இருக்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











