தயாராப்பாளராகும் லோகேஷ் கனகராஜ்? எந்தப் படத்துக்கு தெரியுமா.. விரைவில் அறிவிப்பு!

சென்னை : சர்வதேச அளவில் லோகேஷ் கனகராஜ் தன்னை சிறப்பான இயக்குநராக நிலைநிறுத்தியுள்ளார்.

அடுத்ததாக தளபதி 67 படத்தில் இணையவுள்ளார் லோகேஷ். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

விஜய் இந்தப் படத்தில் 40 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என நான்கு படங்களை இயக்கியதன்மூலம் தன்னை சர்வதேச அளவில் சிறப்பான இயக்குநராக உயர்த்திக் கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். குறிப்பாக சமீபத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படம் இவரை உயரத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது.

தளபதி 67 படம்

தளபதி 67 படம்

அடுத்ததாக விஜய்யின் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யுடன் லோகேஷ் இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறார். மாஸ்டர் படத்தில் வித்தியாசமான மற்றும் சிறப்பான விஜய்யை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த லோகேஷ் இந்தப் படத்தில் அவரை கேங்ஸ்டராக காட்டவுள்ளார்.

40 வயது கேங்ஸ்டர்

40 வயது கேங்ஸ்டர்

மேலும் 40 வயது கேங்ஸ்டராக இந்தப் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் லோகேஷ் யுனிவர்சில் விஜய் இணையவும் விக்ரம் 3 அல்லது கைதி 2 படத்தில் சூர்யாவை போல விஜய்யும் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடையே தளபதி 67 படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் சக்சஸ் மீட்

விக்ரம் சக்சஸ் மீட்

முன்னதாக விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய கமல்ஹாசன், விஜய்யுடனான லோகேஷின் படம் தன்னுடைய படம் போன்றது என்று தெரிவித்துள்ளார். லோகேஷிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஜூன் 22ல் அறிவிப்பு

ஜூன் 22ல் அறிவிப்பு

இதையடுத்து தளபதி 67 படத்தின் உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோவிடம் இருந்து கமல் கைப்பற்றுவாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. தளபதி 67 படத்தின் அறிவிப்பு விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதேபோல அவரது பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

இந்நிலையில் தளபதி 67 படம் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். பீஸ்ட் படம் சிறப்பான வசூலை பெற்ற போதிலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது அவர் நடித்துவரும் தளபதி 66 படத்திற்கு அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இல்லை. இதனால் ரசிகர்கள் லோகேஷுடன் விஜய் இணையும் தளபதி 67 படத்தின் அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

கோடிக்கணக்கில் உயர்ந்த சம்பளம்

கோடிக்கணக்கில் உயர்ந்த சம்பளம்

லோகேஷின் மார்க்கெட் கைதி, மாஸ்டர் படங்களுக்கு பிறகு மிகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து விக்ரம், அடுத்ததாக தளபதி 67 உள்ளிட்ட படங்களுக்கு கோடிக்கணக்கில் அவரது சம்பளம் உயர்ந்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் தளபதி 67 படத்திலேயே அவர் இணை தயாரிப்பாளராக இணையவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் உண்மையானதா என்பது குறித்து விரைவில் தெரியவரும். தற்போது இளம் இயக்குநர்கள் தங்களை தயாரிப்பாளர்களாகவும் உயர்த்தி வருவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X