ரஜினியின் கூலி.. இத்தனை கோடி சம்பளம் வாங்கினேன்.. முதன்முறையாக மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது. இதில் ரஜினியுடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் லோகேஷ் கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் சுமார் ரகம்தான் என்ற லிஸ்ட்டில் சேர்ந்தது. அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். லோகேஷ்தான் இப்போது தமிழின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோ தவிர்த்த மற்ற அனைத்து படங்களுமே பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று அவரது மார்க்கெட்டை உயர்த்தி வைத்தன.
கூலி லோகேஷ் கனகராஜ்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து இப்போது கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் நிலையில்; அதே மாதத்தின் முதல் வாரத்தி ட்ரெய்லர் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகின்றன. இதுவரை இரண்டு சிங்கிள்கள் படத்திலிருந்து ரிலீஸாகியிருக்கின்றன.

சுமார் வரவேற்புதான்: அப்படி வெளியான இரண்டு சிங்கிள்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கின்றன. முதல் பாடலுக்கு டி.ராஜேந்தர், இரண்டாவது பாடலுக்கு பூஜா ஹெக்டே ஆகியோரை பயன்படுத்தியிருந்தர்கள் அனிருத்தும், லோகேஷ் கனகராஜும். ஆனாலும் பாடல்கள் அப்படி ஒன்றும் பெரிதான கவனத்தை ஈர்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடையவே செய்திருக்கிறார்கள்.
படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்னது: அதேசமயம் டப்பிங் ஸ்டூடியோவில் படத்தை பார்த்த ரஜினிக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம். டப்பிங் பேசி முடித்துவிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து, 'எனக்கு இன்னொரு தளபதியை கொடுத்திருக்கிறீர்கள்' என கூறியதாகவும் தெரிகிறது. எனவே இந்த விஷயத்தை கேள்விப்ப்ட்ட ரசிகர்கள் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் பேட்டி: இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில் கூலி தொடர்பாக பல விஷயங்களை பேசினார். அப்போது இப்படத்துக்காக தான் பெற்ற சம்பளம் குறித்தும் பேசியிருக்கிறார் அவர். அந்தப் பேட்டியில் அவர், " கூலி படத்துக்காக நான் 50 கோடி ரூபய் சம்பளமாக வாங்கியிருக்கிறேன். இதற்கு முன்னர் நான் இயக்கியிருந்த லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது. அதனால்தான் எனது சம்பளம் இரண்டு மடங்கு ஆனது.
ஏன் நகார்ஜுனா?: எப்போதுமே முந்தைய படங்களின் ரிசல்ட்தான் எனது சம்பளத்தை தீர்மானிக்கிறது. கூலி படத்தில் ரஜினியை நடிக்க வைப்பதைவிடவும் நாகார்ஜுனாவை வில்லனாக நடிக்க வைக்கத்தான் ரொம்ப சிரமப்பட்டேன். அவர் என்னிடம், 'நான் ஏன் வில்லனாக நடிக்க வேண்டும்' என கேட்டார். பிறகு பலமுறை நேரில் சென்று அவரை சந்தித்து இந்த கேரக்டரில் நடிக்க ஒத்துக்கொள்ள வைத்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











