Trisha - த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு.. கொந்தளித்து எழுந்த லோகேஷ் கனகராஜ்..

சென்னை: Mansoor Ali Khan on Trisha (த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான்) மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதற்கு லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதில் பல வருடங்களுக்கு பிறகு விஜய்யும், த்ரிஷாவும் இணைந்து நடித்தனர். அவர்கள் இரண்டு பேரும் கடைசியாக குருவி படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்ததாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Lokesh Kanagaraj has condemned Mansoor Ali Khan for speaking obscenely about Trisha

விமர்சன ரீதியாக அடி: படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் கூறிவருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கிறதாம். இதன் காரணமாக அண்மையில் லியோ படத்தின் சக்சஸ் மீட்டும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமான முறையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மன்சூர் அலிகான்: இப்படத்தில் விஜய், த்ரிஷாவுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதிலும் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் குறித்து சில மேடைகளில் தொடர்ந்து பேசிவந்த சூழலில் இப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். மன்சூரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துவிட்டார்.

ஆபாச பேச்சு: இந்நிலையில் மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது; குஷ்பூ, ரோஜாவை மெத்தையில் போட்டது போல் த்ரிஷாவை தூக்கிப்போட முடியவிக்கௌ என ஆபாசமான முறையில் பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த த்ரிஷா, "மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்று எனது கவனத்துக்கு வந்தது.

அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. அவருடன் சேர்ந்து இனி நடிக்கமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு" என காட்டமான பதிலடி கொடுத்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் கொந்தளிப்பு: சூழல் இப்படி இருக்க மன்சூர் அலிகானின் பேச்சுக்கு லோகேஷ் கனகராஜும் கோபமடைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகானுடன் ஒன்றாக பணியாற்றினோம். அவரது இந்தப் பேச்சு ரொம்பவே மோசமாக இருக்கிறது. அவர் கூறிய கருத்துக்களை கேட்டு கோபம்தான் ஏற்படுகிறது. பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மரியாதை தரப்பட வேட்னும். மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக மன்சூர் அலிகான் ஏற்கனவே நான் பல நடிகைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சியில் நடித்திருக்கிறேன். அதெல்லாம் எனக்கு ஜாலியாகத்தான் இருக்கும் என சில மாதங்களுக்கு முன்பு பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X